Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - WTC SilK

Pages: [1]
1
கடவுள் எழுதிய முதல் கவிதை...... நிலா!!!!

ஆகாயத்திற்கு அழகு நீ..! அதிசயத்தில் ஒன்று நீ..! சேதாரம் இல்லாத சொக்கதங்கமாய்   கவிஞர்2
நிலா என்னும் காதலி
நிலவினை பற்றி வர்ணிக்க ஆயிரம் உவமை இருந்தாலும் என்னுள் என்றும் காதலி ஆன நிலவை என் காதலால் வர்ணிப்பது தான் முறையோ!!!!!
     ஏனென்றால் அவளும் ஒரு பெண் தானே வெட்கப்படும்பொழுது பெண்களின் முகம் சிவக்கும் என அறிந்த நான் உன் வெட்கத்தில் வெண்மையைக் கண்டு மென்மையானேனடி!!!
      உன் பார்வையின் வெளிச்சம் பட்டால் பல நோய்கள் பறந்தோடும் என்கிறது அறிவியலின் ஆய்வு அவர்களுக்கு என்ன தெரியும் என் உடலே உன் பார்வையால் மட்டுமே நிறைந்திருக்கும் அனிச்சம் பூ என்று!!!!!!
       ஊரே உறக்கத்தில் அடங்கி போய் இருக்கும் நேரத்தில் நீ மட்டும் உறங்காமல் உழவுகின்ற மாயம் என்ன என்னை வந்தடைய நீயும் என்னை தேடுகின்றாயோ உன் காதலால்!!!!
      நீ வராத அந்த மூன்று நாள் உன் மாதக் கணக்கில் மாதவிலக்காக ஆகின்றதோ என்னவளின் வலியை எவ்வாறு பொறுத்துக் கொள்வேன் நானும் அந்த மூன்று நாளும் விரதம் என்னும் பெயரில் உனக்காக தனித்திருக்கிறேன்
      கால்கள் இல்லாமல் நீ நடையிட்டு வரும் ஓசை என் உள்ளுக்குள் ஊறுகின்றது என்னை தேடி நீ வந்து விட்டாய் என்று!!!!!
      உன் ஆடையான மெல்லிய கரு மேகங்கள் கூட நடுநிசியில் உள்ள அழகினை மறைக்க வெட்கப்பட்டு ஆடை கலைந்தன காற்றில் கரைந்தன!!!!!
      நடுநிசி நேரத்தில் நிலவின் முழு அழகினை காண என்னவரம் பெற்றேன் என்னவளின் இந்த அழகைக் காண!!!!
       கண்மூடி உன் மடியில் நான் துயில நீ தாலாட்டு பாடிய என்னை உறங்க வைத்து எங்கு சென்றாய் நாளை நீ வருவாய் என்ற எண்ணத்தில் என் இதயம் துடிக்க உனக்காக காத்திருக்கின்றேன் இந்தப் பகலும் அந்த மூன்று இரவும்!!!!!
உன் கட்டுடல் மொட்டுடன் அதிராமல் களையாடி மதியெங்கும் கவி சேர்க்கிறேன்!!!!!
      இப்படிக்கு உன் காதலனான நடுநிசி நாயகன்
களுக்கு கிடைத்த கற்பனை சுரங்கம் நீ. ...!

எட்டாத உயரத்தில்  இருந்தாலும் அனைவரது எண்ணங்களையும் எட்டி பிடிக்க வைப்பது நீ....!

மாடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய்! தெருக்கோடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய் நீ....!

ஆகாய சமஸ்தானத்தில் இரவை ஆளும் அரசி நீ...!

ஆகாயம் இருந்து கீழே இறங்கி வந்தாள் ... ஆண்களையும் காதல் வசபடுதுவாய்.... பெண்களையும் பொறாமைகொள்ள வைக்கும் பேரழகி நீ....!

ஒப்பனைகள் செய்து தன்னை அழகு என நினைக்கும் பெண்கள் மத்தியிலும்,பல ஆண்களின் கனவு தேவதையும், கவிதை தேவதையும் நீ...!

காகித எழுத்தாய் கரையும் கனவுகளுக்கு உயிர் தர வந்தாயோ! இல்லை காணாமல் மறைந்த கனவுகளை தேடி தர வந்தாயோ நீ...!

சிலநாள் இருளாக... சிலநாள் வெளிச்சமாக... சில நாள் தேய்ந்து தேய்பிறையாய்! சிலநாள் பூரித்த தேகம் கொண்ட வளர்பிறையாய் நீ...!

அன்னையவள் தன் அன்பு பிள்ளைக்கு நெய் ஊறிய பருப்பு சாதத்தை பக்குவமாய் பார்த்து ஊட்டிடவே  பாங்குடனே  தான் பறந்து  வந்தாயோ? நீ...!

வண்ணம் இல்லாமல் வானில் வரைந்த சித்திரமாக, வாடாத மலராக இரவு வானில் உலாவருவதும் நீ...!

ஆம்... நிலா ஓரு பெண் தான்....!

மூக்கும் இல்லை முழியும் இல்லை ஆனாலும் அழகு பெண் நீ தான் நிலா…
நட்சத்திர பூக்களின் அர்ச்சனையிலே  வான் வீதி உலா வருபவள் நீ...!

தனிமையின் சுகத்தை தனியே பெற விடாமல் உடன் துணையாய் இருக்க வந்தவளும் நீ...!

சில்லென வீசும் தென்றல் காற்று கூட சிலிர்க்க செய்வதில்லை என்னை சிலிர்க்க செய்யும் பிம்ப வடிவம் நீ...!

உன் ஒளி முகம் காட்டி! இருளை ஓட்டி! வட்ட பந்தாய் வானில் மிதந்து எட்டாப் பறக்கும் வான் மகளோ நீ...!

பகல்லாம் பாடுபட்ட பகலவன் சற்று ஓய்வெடுக்க ..இரவெல்லாம் ஒளி தந்து இவ்வுலகம் காக்க வந்தது நீ...!

இவ்வளவு அம்சம் கொண்ட நிலாவை வானதிலேயே  தங்கவைத்து அனைவரையும் ஏங்கவைத்த  கடவுளும் கள்நெஞ்சகாரனே....

விண்ணை தாண்டி மண்ணில் வருவாயா...!

 நானும் பாடுகிறேன்...
நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடி வா....!🦋

  [/color][/size][/glow][/b]

2
நிலா என்னும் காதலி
நிலவினை பற்றி வர்ணிக்க ஆயிரம் உவமை இருந்தாலும் என்னுள் என்றும் காதலி ஆன நிலவை என் காதலால் வர்ணிப்பது தான் முறையோ!!!!!
     ஏனென்றால் அவளும் ஒரு பெண் தானே வெட்கப்படும்பொழுது பெண்களின் முகம் சிவக்கும் என அறிந்த நான் உன் வெட்கத்தில் வெண்மையைக் கண்டு மென்மையானேனடி!!!
      உன் பார்வையின் வெளிச்சம் பட்டால் பல நோய்கள் பறந்தோடும் என்கிறது அறிவியலின் ஆய்வு அவர்களுக்கு என்ன தெரியும் என் உடலே உன் பார்வையால் மட்டுமே நிறைந்திருக்கும் அனிச்சம் பூ என்று!!!!!!
       ஊரே உறக்கத்தில் அடங்கி போய் இருக்கும் நேரத்தில் நீ மட்டும் உறங்காமல் உழவுகின்ற மாயம் என்ன என்னை வந்தடைய நீயும் என்னை தேடுகின்றாயோ உன் காதலனாய்!!!!
      நீ வராத அந்த மூன்று நாள் உன் மாதக் கணக்கில் மாதவிலக்காக ஆகின்றதோ என்னவளின் வலியை எவ்வாறு பொறுத்துக் கொள்வேன் நானும் அவ்வுண்டு நாளும் விரதம் என்னும் பெயரில் உனக்காக தனித்திருக்கிறேன்
      கால்கள் இல்லாமல் நீ நடையிட்டு வரும் ஓசை என் உள்ளுக்குள் ஊறுகின்றது என்னை தேடி நீ வந்து விட்டாய் என்று!!!!!
      உன் ஆடையான மெல்லிய கரு மேகங்கள் கூட நடுநிசியில் உள்ள அழகினை மறைக்க வைக்கப்பட்டு அதுவும் கலந்தன காற்றில் கரைந்தன!!!!!
      நடுநிசி நேரத்தில் நிலவின் முழு அழகினை காண என்னவரம் பெற்றேன் என்னவளின் இந்த அழகைக் காண!!!!
       கண்மூடி உன் மடியில் நான் துயில நீ தாலாட்டு பாடிய என்னை உறங்க வைத்து எங்கு சென்றாய் நாளை நீ வருவாய் என்ற எண்ணத்தில் என் இதயம் துடிக்க உனக்காக காத்திருக்கின்றேன் இந்தப் பகலும் அந்த மூன்று இரவும்!!!!!
உன் கட்டுடல் முற்றுடன் அதிராமல் களையாடி மதியெங்கும் கவி சேர்க்கிறேன்!!!!!
      இப்படிக்கு உன் காதலனான நடுநிசி நாயகன்

3
கண்டவுடன் காதல் என்று சொல்லக்கேட்ட நான்...
 கண் இமைக்கும் நொடியில் காதலால் இழுக்கப்பட்டேன்.. இன்னும் அவளைப் பார்த்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை ..
ஆனால் அவளுடன் ஆயிரம் ஆண்டு வாழ்ந்த நினைப்பு!!! அவள் பெயர் தேன்மொழியாகத் தான் இருக்க வேண்டும்...! ஏனென்றால் அவள் பேசும் வார்த்தைகள் தேனாக ஒலிக்கின்றது ...
என் இதயத்தில் தேன் ஒழுக ஒழுக என் வார்த்தைகளில் வருகின்றாள் கவிதையாய்!!!!
 காதல் என்றால் நான்கு கண்கள் பார்த்து இரு இதயம் லயத்து அதில் உருவாகும் மௌனம் வார்த்தைகளாய் வெடிப்பது தான் காதல் என்பார்கள்.... எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை இரு கண்கள் பார்த்து ஓர் இதயம் பேசி அவள் நினைவினை நினைத்து நினைத்து வரும் நினைவுகள் தான் காதல் என்று!!!!
 சில பேர் சொல்லுவார்கள் இது ஒரு தலை காதல் என்று..
 பல பேர் சொல்வார்கள் இது பைத்தியக்கார காதல் என்று ...
எவருக்குத் தெரியும் இதுதான் என் புனிதமான காதல் என்று !!!!
அப்பொழுது சொன்னேன் என் இதயம் தேன் ஒழுக ஒழுக வரும் வார்த்தை என்று என் காதலை.... இப்பொழுது சொல்கின்றேன் இதயம் கனத்து உதிரம் சொட்ட சொட்ட கண்களில் கண்ணீராய் வருகிறாள் என் காதலாய்!!!!
 என்னிடம் இருக்கும் பென்சிலின் கார்பன் குச்சிகள் தீர்ந்தன என்னவளின் முகத்தினை தீட்ட நினைத்து....
 இமயம் கூட சுமை இல்லையடி உன் இதயத்தை நான் சுமக்கும் பொழுது!!! பெண்ணே நான் யார் என்று கூட தெரியாத உன்னிடம் நான் என்ன சொல்வேன்...
 என் வாழ்க்கையே நீ என்று வாழ்ந்து வரும் என் காதலை!!!!
 என்னுள் என்றும் காதலாய் நீயே!!!

Pages: [1]