Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💫Season16💥  (Read 682 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
💥SEASON 16💫
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் TCC Team..!
« Last Edit: April 28, 2024, 03:27:32 pm by Maari »

Ramya

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +6/-0
    • View Profile
இசை இல்லையேல் இந்த உலமும் இல்லை

பிறக்கும் குழந்தையின் அழுகுரல் இசையே

அதற்கு அம்மா பாடும் தாலாட்டு இசையே

முதன் முதலில் ஊதிய ஊதி கூட இசையே

நண்பனோடு சேர்ந்து மழையில் நனைந்து விளையாடும் போது உண்டான சத்தம் இசையே

கூவும் குயிலின் சத்தம் இசையே

உற்றும் நீர் வீழ்ச்சியின் சத்தம் இசையே

அன்பு காதலன் கொடுக்கும் முத்தத்தின் சத்தம் இசையே

அதை பார்த்து அப்பா விட்ட அரை கூட இசையே

திருமணத்தில் கேட்கும் இசை

கணவனும் மனைவியும் பேசும் கொஞ்சல் கூட இசையே

தனிமையில் கேட்கும் வண்டின் ரீங்காரம் கூட இசையே

செவி அற்றவர்க்கு காற்றின் அசைவு கூட இசையே

இறுதி ஊர்வலத்தில் கூட இசையே

பிறப்பில் தொடங்கி இறப்பு வரை இசையே துணை

By Ramya
( அத்திந்தோம் பாட்டு சந்திரமுகி படத்தில் இருந்து என் fav )
💓💖 ரம்யா 💖💓

Vaishnavi

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +1/-0
    • View Profile
          🎵🎵🎵🎵🎵இசை என் வாழ்வில்🎵🎵🎵🎵🎵
              ❤நான் இந்த உலகிற்கு வரும் முன்னரே ❤
              ❤கேட்டு  இரசித்திட்ட அழகான இசை ❤
              ❤ என் அம்மாவின் இதயத் துடிப்பு  மட்டுமே❤

 ❤மனம் ஒன்றி ........ பார்வை நிறுத்தி ....... உடல் பொருந்தி நின்றேன்❤
 ❤சிலையாக 💕  என்னை மறந்து தென்றல் முகத்தில் வருட❤
❤இசை நெஞ்சைத் தொட ...... மெய்மறந்து நின்றேன்❤
❤கண்ணில் நீர் வழிய ........ கல்லும் கசிந்துருகும்...... கொடியவனும் மாறுவான்❤
 ❤மனதை தீண்டும் இசையின் திறன் இதுவே  !!!!!!!

🎶🎶🎶🎶🎶 இசை என் வாழ்வில்🎶🎶🎶🎶🎶

                 ❤துன்பமில்லாத போதை இசை.........
                 ❤காதுக்கு  இனிமை இசை.......
                 ❤காதலுக்கு மரியாதை இசை.........
                 ❤கவலைக்கு மருந்து இசை........
                 ❤முயற்சிக்கு நம்பிக்கைஇசை.........
                 ❤பயணங்களுக்கு நண்பன் இசை.......
          💕இசை இல்லையேல் இவ்வுலகம் இல்லை💕
  💕இசைக்கு நினைவுகளைத் தூண்டும்  சக்தியுண்டு💕
                      💕சிலசமயம் வலிக்குமளவிற்கு💕

Rapunzel

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +0/-0
    • View Profile

நாம் அனைவரையும் மெய்மறக்க செய்து இசை நம் இதயத்தையும் ஆன்மாவையும் தொடுகிறது...

இசை பல வடிவங்களில் நமக்கு  நிதானத்தையும், மன நிம்மதியையும் தர உதவுகிறது.

இசை என்பது ஒரு மொழியை பற்றியது அல்ல..

அது ஒரு முடிவற்ற உணர்வுகளின் பாலம்...

அது நம்மை பல நினைவுகளுக்குள் மூழ்கசெய்கிறது..

நம் வாழ்க்கைப் பயணங்கள் அனைத்தையும் நினைவுபடுத்துகிறது..

இசை நம்மை ஒரே மனநிலையில் தள்ளுகிறது..😍

எப்போது மவுனம் பேசுகிறதோ அங்கே இசை மொழியாகிறது.

இசை நம் உணர்வுகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல..

நமக்குள் இருக்கும் ஆற்றமுடியா காயங்களுக்கு மருந்தாகவும் மாறுகிறது.

மகிழ்ச்சியில் திலைத்து இன்பங்களால் பூரிப்போம் இந்த அருமையான இசையை ரசிப்பதன் மூலம்..
« Last Edit: May 10, 2024, 08:38:23 am by Maari »

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
எங்கும் இசை எதிலும் இசை….
ஆரம்பம் ஆகும் போதும் இசை
மனிதன் ஆடி அடங்கும் போதும் இசை…
ஆரம்பம் ஆகும் பொது லப் டப்  லப் டப் இசை….
ஆடி அடங்கும் போது டண்டனக்கா இசை
பிறக்கும் போது உன் அலரலில் ஆரம்பிக்கும் இசை இறக்கும் போது பிறர் அழுகையில் முடிகிறது
ஆசையில் வரும் இசை முத்தம்
அழுகையில் வரும் இசை நிசப்தம்
தனிமையின் துணைவன் இசை
தன்னம்பிக்கையின் தலைவன் இசை
அன்னத்தை அல்லும் போதும் இசை
சிறு குழந்தையின் கன்னத்தை கிள்ளும் போதும் இசை
எங்கும் இசை எதிலும் இசை
பிரபஞ்சத்தின் இசை ஓம் என்று உலகம்
கூறுகிறது
இரு மேகங்கள் உரசும் போது வரும் இசை
இரு இதழ்கள் உரசும் போது வரும் இசை
என்னவளின் இருதய ஓசை கேட்க இதுநாள் வரை ஏக்கமோடு காத்திருக்கும் என் இதயத்தின் ஓசை அழகு
எங்கும் இசை எதிலும் இசை

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் நான் உங்கள் நண்பன் JosEpH_VJ alias Mamakutty ☺️🫣🙈

gata

  • Newbie
  • *
  • Posts: 7
  • Reactions: +3/-0
    • View Profile
hi  frnds  vanga isaiku oru kavitha solara

enai kathalitha pennohh aval paravaiyal en idaiyathai parithal
unai na pathathu illai ne karrupoo velaiyoo theriythu enakuu
un idamoo na ketathu un issai eno
 therya vellai una idam matum
en amnam sirru pillaiyai thulukirathuu eno theriya vilai
ne indri oru nalum en payanam illa
en vili vilipathu un isaiyalea
eyakarin oir  athisayam ne
thanimaiyulum neee
inimaiyum nee
ena thavam seithanoo unai en valvil pera
kadhal kural kuda kasakum aanal un isai endrum illa

MurrattuKaalai

  • Newbie
  • *
  • Posts: 13
  • Reactions: +2/-0
    • View Profile
இசையை காதல் செய்வோம் ராமியமகா  ;D

காலையில் கண் விழிக்கும் போதும்  ;D
இரவில் உரங்கப் போகும் போதும் ???
கனவில் கூட தொடரும் ஒன்று :-*
நினைவில் நல்ல இனிமை என்று இசையை காதல் செய்வோம்"


மகிழ்ச்சியோ, புகழ்ச்சியோ,
இன்பமோ, துன்பமோ
அனைத்தையும் இசையின்
மூலம் அசைபோடலாம்.

இசையின் ஓசை அனைத்து
ஆசைகளையும் மறக்கடிக்கும்.
இசையின் வழி இன்பத்தால்
மனதின் வலி அகலும்.
மரணமும் தள்ளிப்போகும்


மகிழ்ச்சியில் மனம் திளைக்கும் போதும் துயரத்தில் உள்ளம் துன்புறும் போதும் இசையை காதல் செய்வோம்


இசைக்கு உயிருண்டா எனில் உண்டென்பேன்
நம்முள் வெறும் காற்றாய் அலையும் காற்று
குழலின் துளையில் இறங்கி கலைஞன்
விரல்கள் துளையைத் தடவ இசையாகிறது இசையை காதல் செய்வோம் ;D


காற்றின் இசை
அசையும் மரத்திற்குதான் தெரியும் 8)

பறவையின் இசை
கூவும் குயிலுக்குதான் தெரியும் ;D

மழையின் இசை
விழும் தூறலுக்குதான் தெரியும் ;D

வாசிப்பவனின் இசை
நேசிக்கும் மனிதனுக்குதான் தெரியும் இசையை காதல் செய்வோம்




இசை

ஸ்வரங்களின் சுவாரஸ்யம் 8)
வார்த்தை இல்ல வாழ்க்கை 8)
மொழிகளின் முன்னோடி 8)
இரவுகளின் நாயகன் 8)
வலிகளில் கண்ணீர் ;D
சந்தோஷத்தில் உச்சம் 8)
துரோகத்தில் துயரம்...

இசை
நம்பிக்கையில் நண்பன்...
பயணத்தில் சகபயணி...
தூரத்தில் நிலவு...
அருகில் அம்மா...
குழந்தையின் குதூகலம்
இயற்கையின் அதிசயம்

இசையை காதல் செய்வோம்




இசையோடு வந்தேன்
இசையோடு வாழ்வேன்
இசையோடு போவேன்
இசையாவேன்
 

Best lines in the World 🌎

« Last Edit: May 12, 2024, 07:56:41 am by MurrattuKaalai »

Jeni

  • Newbie
  • *
  • Posts: 16
  • Reactions: +3/-0
    • View Profile
அன்று ஒரு காலை பொழுது
பர பர எ‌ன்று கிளம்பி வகுப்பறைக்கு செல்ல
பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன்
அப்போது ஒரு இன்னிசை ஒலிக்க
என் மனதில் தூங்கி கொண்டு இருந்த
நினைவலைகள் தட்டி எழுந்தது
என் சந்தோஷம் ,துக்கம் ,காதல் ,
போன்று எல்லா உணர்வுகளையும் கொண்டது இந்த இசை
நான் உறங்காமல் விழித்து இருக்கும் நேரத்தில்
இசை என்னும் தன் மயில் பீலி விரல்களை கொண்டு 
என்னை வருடி உறங்க வைக்கும்
கல்லும் கசிந்து விடும் அழகிய இசையை ரசிக்கத் தெரிந்தால்
தீயவன் திருந்துவான் இன்னிசையை கேட்டால்
சொல்லாத காதல் எல்லாம்
இரவில் சுக இம்சைகள் புரியும்
மீண்டும் மீண்டும் கெட்ட பாடலை
 இசைத்து கனவு காண்கிறார்கள்
இரவுகள் நீடித்தால் இன்னிசை கேட்டு
 கவிஞர்கள் ஆனாலும் ஆச்சர்யம் இல்லை
இசையும் காதலும் ஒரு உணர்ச்சி குவியல்கள்
காற்றில் இசை ...பேச்சில் இசை ...
எழுத்தில் இசை எல்லாவற்றிலுமே இசையை உணரலாம்
அதை ரசிக்க மனம் இருந்தால்
இசை இல்லமால் இவ்வுலகில் ஒருபோதும் ஜீவிக்க முடியாது !
என்றும் நான் இசையின் ரசிகை தான் .....!
Jeni

LOVELY QUEEN

  • Global Moderator
  • Newbie
  • *****
  • Posts: 14
  • Reactions: +4/-0
    • View Profile
வண்டு துளைக்கா மூங்கிலில் காற்று நுழைந்து கவிதையானதோ..
கவிதையாய் மாறிய காற்று காதினில் நுழையும் போது, ஒலியாகவோ அல்லது மனமறியும் சொல்லாகவோ மெய்சிலிர்க்க வைக்கிறதோ....
காற்றுக் கவிதையின் ஒவ்வொரு அணுவும் என் காதினில் நுழைந்து நெஞ்சைக் கவர்ந்தனவே...

கரை தொடும் அலையின் ஓசையும்
தரை தொடும் மழலையின் நடையும் காற்றில் எங்கும் சேர்ந்தனவே..
தட்டித் தட்டி சேர்க்கும் தோளின் தாளம் கூட கருவினில் பிறக்கும் ஓசையானதே...

எட்டுதித்திக்கும் பறந்திருக்கும் வானம் சூழ் மேகம் போல, இடியோ, மழையோ, புயலோ, சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் கரையும் ஒரு துளி பனித்துளி போல் ஒவ்வொரு மொட்டிலிருந்தும் அணுவிலிருந்தும் இசை தோன்றியதுவே.
கண்ணிமைக்கும் நொடிப் பொழுதில் இயற்கையாய் கவர்ந்த என்னை இசையே...

கருவினில் தொடங்கி கல்லறை தொடும் இடைப்பட்ட காலங்களில் அழுகையும், சிந்தனையும், சிதறலும், சந்தோசம், சோகம், துக்கம், துயரம் என வாழ்வின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் ஒவ்வொரு நிறமாக என்னோடு பயணம் செய்கிறாய் நீ..... இசையான இன்னுயிரே..
[/b]

Manithan

  • Guest
அதிகாலை குருவிகளின் ஓசை கண்டேன்
அந்திமாலை பூங்குயிலின் ராகம் கண்டேன்

கருமேகம் சூழ இடியின் கோபம் கண்டேன்
காரிருளில் மழை துளியின் சத்தம் கண்டேன்

மழைச்சாரலிலும் மெல்லிய ஓசை கண்டேன்
மலை நோக்கி மழையை ஓடக் கண்டேன்

அழகான அருவிகொட்டும் ஓசை கண்டேன்
அதன் அருகே பறவைகள் பாடக் கண்டேன்

பாட்டிற்கு மூங்கில் அசையக் கண்டேன்
மூங்கிலும் புல்லாங்குழலாய் மாறக் கண்டேன்

ஒலிகளுக்கு உணர்வூட்டும் அற்புதமே
தமிழ் கலைகளுக்கு உயிரூட்டும் அதிசயமே
உலகெங்கும் வசிப்பாய் நீயே
மனிதன் மனதை ஆளும் இசையே...