Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 05✨  (Read 1646 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐

✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
✨SEASON 05✨
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் ThamizhiniChat Team..!
« Last Edit: September 24, 2023, 05:46:51 pm by Maari »

Blacked

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +0/-0
    • View Profile
     ! முகமூடிய பத்தி கவிதை சொல்ல முடியாது...

    ! ஏன் தெரியுமா கவிதையே ஒரு முகமுடி தான்...
   
   ! இந்த முகமூடியை ப‌ற்‌றி எழுதுவதும் நானே,
 நானே முகமூடி தான்...
     
     ! ஏன் இதை படிக்கும் நீங்கள் ஒவ்வொரும் முகமுடி தான்...

  "கர்வமாக சொல்கிறேன்"
 
    ! தான் ஒரு தலையாக காதலித்த பெண்ணை தன் நண்பன் விரும்பி மணக்க போகிறேன் என்று சந்தோஷ பட்ட அந்த மனம் உள்ளவன் கூட முகமுடி தான்...

      ! தனது சகோதரி திருமணத்திற்க்காக தன் படிப்பை கண்ணீருடன் விட்டவனும் முகமுடி தான்...
   
    ! உறவுகள் இருந்தும், நண்பர்கள் இருந்தும் தனக்கு தோல் குடுக்க யாரும் இல்லை என்று தெரிந்தும்... தனி ஒருவனாய் நானும் வாழ்வில் சாதித்தேன், அவனுக்குள்ளே இருப்பவனும் முகமுடி தான்...

    *உங்கள் முகமுடி நான் blacked இது எனது சொந்த முகமுடி இத இங்க சொல்ல என‌க்கு ஒரு முகமுடி கிடைச்சது அந்த முகமுடி இதான்..... இத படிக்கிற ஒவ்வொருக்கும் ஒரு முகமுடி இருக்கன் அவன் கூட பேசுங்க Life ஹாப்பி இருக்கும்........
        இப்படிக்கு
                    Blacked
« Last Edit: September 26, 2023, 09:33:49 pm by Maari »

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
வணக்கம் நான் உங்களில் ஒருவள் என்று சொல்லவே எனக்கு ஒரு முகமூடி தேவைப்படுகிறது!
ஒருவருவரும் முகமூடி அணிந்தது தான் இந்த முகமூடி உலகத்தில் வாழ்கிறார்கள்
❤️அவர்களை தவறு என்று சொல்ல முடியாது தவறு சொல்பவர்களே முகமூடி போடுதான் சொல்லுவார்கள்❤️
இந்த சுயநலம் உள்ள உலகில்
முகமூடி இல்ல மனிதரை காண்பது அரிது😷.
என்னுடைய வலியே மறைக்க முகமூடி அணித்தேன்!
நம்மை ஒருவர் மதிக்க எனக்கு
ஒரு அழகிய முகம் வேண்டும் அவர்கள் சிரித்தாள் சிரிக்கவும்
அழுதாள் ஆறுதல் சொல்லவும் நல்லவர் என்று ஒரு அடையாள முகமூடி தேவை....
போலி மனிதர்கள் வாழும் உலகத்தில்
நாமமும் அவர்களைப்போல ஆயிரம் ஆயிரம் முகமூடிகள் தேவை படுகிறது........
முகமூடி அணிவார்கள் யாரும் கேட்டவர்கள் இல்லை
கட்டாயத்தின் பெயரில் அணிந்து
அதை களைக்க வேறு ஒரு முகமூடி தேவைப்படுகின்றது!!!!
[/b]
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
நிழலாடும் உலகில் நிஜம் தேடி தொற்றுவன் பொறுப்பை கட்டிக்கொள்ள அணியும் வேடமும் முக முடியே

மனம் ஒத்தா இடம் சிரித்தும் மனம் வாடா இடம் அழுதும் அனித்தேன் முகமூடி எனும் ஆக சிறந்த அணிகலனை

பணிச்சென்ற பின் அன்னையிடம் பசி மறைக்க மகிழ்ச்சி எனும் முகமூடி அனித்தேன்

பணிசுமை மறைக்க தந்தையிடம் சிரிப்பேனும் முகமூடி அனுத்தேன்

அவள் நினைவு கடல் ஆழம் அழுத்த சிற்பெனும் முகமூடி தூடுப்பை கொண்டே கரை சேர்த்தேன்

என் மகிழ்ச்சியில் சிரித்தவன் என் துன்பத்தில் அழுத்தவனின் உண்மை முகம் மறைத்து அந்த நொடி என் உணர்வை அனுபவிக்க செய்த காப்பானும் முகமூடியே

நேரத்திரனாய் வாழ்வேன் என்று சுடும் தீயாயை சொல் கொண்டு சுட்டேரிப்பதை விட பித்தறுக்கரணை வாழ்த்து செல்கிறேன் முகமூடியுடன்

வாழ்வில் ஒருமுறையேனும் உன்னை அணிய ஒருவன் உண்டேனில் அவன் பருவம் காண பச்சிளம் குழந்தையே
« Last Edit: September 26, 2023, 09:34:26 pm by Maari »

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
💐இக் கவி என்னுள் வாழும் என் ராதைக்கு உரியது..!
காதல் என்னும் இன்பத்தை என் வாழ்வில் பிரகாசிக்க வைக்க
நான் என்னவளின் முன் தினம் தினம்
ஒவ்வொரு முகமூடியுடன் நடமாடும் ஒரு காதல் சித்தன்..
என் நிஜமோ கரிசல் காட்டில் பூத்திடும் கள்ளி செடி போல்….
தனிமையில் துவண்டு வேதனையில் இருந்தாலும்…!
இனியவளின் முன் நான் தோன்றும் தருணத்தில்
என் நெஞ்சதுக்கு குறிஞ்சி மலர் என்னும் முகமூடியை …..
அவளின் சந்தோச புன்னகையை வெள்ளி மலர் போல்
ஜொலித்திட தினம் தினம் சூடினேன்!
காதலின் அடித்தளம் காமத்தில் தான் தோன்றுகிறது …
என்று ஒரு கவிஞன் சொன்னான்…!
அந்த காமம் கூட …
என்னவள் என் மீது கொண்ட கொள்ளை அன்பு முன்…
என்னுள் உள்ள காமம் கூட தோழி என்னும் முகமூடியை சூடுகிறதே..!
என்னை பெற்று எடுத்த தாய் கூட ……
என் சந்தோச மலர் வாட கூடாது என எண்ணி…
தான் படும் வேதனையை முகமூடி சூடுவது போல்….
என்னவளோ நான் அவள் மீது கொள்ளும் கோபம் கூட …
நீ என் மீது காட்டும் அன்பு என சொல்லி ….
தன் வேதனைக்கு அத்தருணத்தில்
முகமூடி சூடுகிறாள் …!
நாம் இருவர் உள்ளமோ…
நம் இருவர் நெஞ்சம் …
ஒரு நெஞ்சமாய் காலம் இணைந்திட தினம் தினம்
முகமூடி சூடுகிறது என்னவளே ..!
நம் இருவர் முகமூடி என்றும் மோகத்தை …
விழியலை காணும் இருட்டு போல்
நம் முகமூடியை விளக்கி …!
நம் உள்ளங்கள் இணைந்து ….
தேவர் கூட்டம் நம்மை கண்டு வியர்க்கும் போல்….
 பூலோகத்தில்
ராதை கரம் கோர்க்க கிருஷ்ணர்
மீண்டும் அவதரித்தார்
என நாம் இணைந்து இருப்போம் …..
இறுதி வரை என் ராதையே…
😘THIMIRU PONNU 💕
« Last Edit: September 28, 2023, 01:53:27 am by Maari »

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 24
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
ஒவெருவரும் ஒரு வகையில்
முகமூடி அணிந்து தான் வாழ்கிறோம்
சிறு வயதில் தனக்கு வேண்டியதை அடைய
தாயின் பரிவை பெற
கருணை என்னும் முகமூடியை அணித்தேன்
பிறகு பார்த்த மறுகணமே
நான் காட்டும் விளையாட்டு பொருளை பெற்றான்
அப்போது தெரியவில்லை 
முகமூடியின் பாரம் என்னவென்று
சமுதாயத்தின் வாசலில்
நூழையும்போது தேவைப்பட்டது
அன்பு வெறுப்பு சிரிப்பு
என பல முகமூடியை அணிந்தேன்
தனிமையில் முகமூடியை
விலக்கிய பின்பு தெரிந்தது.....
மனதின் ஓட்டம் கண்களில் கண்ணீராய்
சிலசமயங்களில் .....
எதற்கு இந்த முகமூடி என்று எண்ணியதுண்டு
ஆனால் வஞ்சம் நிறைந்த உலகில்
வஞ்சிக்க படுவதை தவிர்க்க அணித்தேன்
இன்று.....
என் நிஜமுகம் மறந்து
போலியானவனை நிற்கின்றேன்
« Last Edit: September 28, 2023, 01:54:01 am by Maari »

Rapunzel

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +0/-0
    • View Profile
மனிதர்கள் பலதரப்பட்ட முகங்களை அணிகிறார்கள்..😇 வெவ்வேறு இடங்களில்
 தங்கள் அணுகுமுறையை
மாற்றிக் கொள்கிறார்கள்..🙃
எனவே அவர்கள் பாராட்டும்போது
உயர்வாக நினைக்காதீர்கள்..😌
அவர்கள் விமர்சிக்கும் போது
 தாழ்வாக நினைக்காதீர்கள்
உலகமே குழப்பமான
முகங்களால் நிறைந்துள்ளது..🙂
 எனவே யாரேனும் ஊக்கம் அளிக்கும் போது
உங்கள் வாழ்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள்..😌
எப்பொழுதும் நீங்களாகவே இருங்கள்.
இறுதியாக..
ஒவ்வொருவரும் தங்களின் கருணையை வெளிப்படுத்தி
 அன்பாகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்..   
அவர்களின் ஒரே இதயம் நிறைந்த புன்னகையுடன்..🤗
« Last Edit: September 28, 2023, 02:43:57 pm by Maari »

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
நாடாளும் மன்னனின் நயம் மாறும் செயல்களை மக்களோடு எடுத்துரைக்க கலைஞன் இடம் இருந்து தோன்றியது இந்த முகமூடி
புன்னகைக்கு தோன்றிய முகமூடி
பொன் நகைக்காக கூடியது கள்வனின் கைகளில்…
இவை அனைத்தும் உறுவம் உள்ள முகமூடிகள்
காதலுக்காக கயவர்கள் அணியும் முகமூடிகள் சிலருக்கு கல்யாணத்திற்கு பின் தெரியும்
அலுவகத்தில் ஆள நினைப்போரும்
அரசியலில் ஆள நினைப்போரும்
அரசாங்கத்தில் ஆள நினைப்போரும்
அணியும் முகமூடி உருவமற்றது ..

முகமூடி ஆபத்தானது மட்டும் அல்ல அழகானது கூட

தாயை பிரிந்து வேலை செய்யும் மகன் மாத கடைசியில் ஒரு வேலை உண்டுவிட்டு ஒய்யாரமாய் இருப்பது போல் நடிக்கும் முகமூடி அழகு

புகுந்த வீட்டில் புடிக்காத மாமியாரின் செயல்களை தன் கணவனுக்காக கண்ணீரை மறைக்கும் முகமூடி என்னவளுக்கு அழகு

வலிக்காமல் அடுத்த அடி விழும் முன் அழும் குழந்தையின் அழுகையும் ஒரு அழகான முகமூடி

அன்பிற்கு முகமூடி அழகானது
அறிவிற்கும் அரசியலுக்கும் முகமூடி ஆபத்தானது…..

ஆயிரம் கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்
ஆதி JS







« Last Edit: September 28, 2023, 02:44:53 pm by Maari »

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
மற்றவர்கள் மனதுக்குள் நுழைய
முயல்பவனே
உன் மனதுக்குள் நுழைய நீ
முயன்றதுண்டோ

முயன்றிருந்தால்...
உன் மனம்
அசிங்கங்களின் குப்பைக்கூடையாய்
இருப்பதனை அறிந்திருப்பாய்
உன் மனம்
உன் ரகசிய ஆசைகளை
யாருக்கும் தெரியாமல் ஒளித்துவைத்திருக்கும்
அந்தரங்க அறை என்பதனை
நீ அறிந்திருப்பாய்

உன் மனம்
ஒரு பாற்கடல்
அதை கடைந்தால் அமுதம் மட்டுமல்ல
ஆலகாலமும் வெளிப்படும் என்பதனை
நீ அறிவாயா

உன் மனம் ஒரு பருந்து
அது மேலே பறந்து கொண்டிருந்தாலும்
கீழே செத்துக்கிடக்கும்
எலிகளை தேடுகிறது அல்லவா

உன் மனம் ஒரு மகா சமுத்திரம்
பயங்கரமான அதன் ஆழம்
உனக்கே தெரியாதல்லவா
உன் முகவரி
உன் முகத்தில் இல்லை
உன் மனதில் தான் இருக்கிறது
அதை யாருக்காவது தெரிவிக்கும்
தைரியம் உனக்கு உண்டா

சமூகம் என்பது ஒரு
முகமூடி நடன அரங்கம்
நாம் அனைவரும்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக் கொண்டிருக்கிறோம்
« Last Edit: October 02, 2023, 01:26:39 am by Maari »

Mayuu

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
Hi frnd elaru epdi irukenga I'm so happy to chat here

பொய் என்னும் முகமூடி அணிந்து
           அழகாக தோன்றி
அதிக நண்பர்களை சம்பாதிப்பதை விட
உண்மை என்னும் முகமூடி அணிந்து
தனியாக இருப்பது நல்லது
            ஏனென்றால்
பொய் முகமூடி அணிந்த உறவுகள்
    போலியாகத்தான் இருக்கும்
பொய் என்னும் முகமூடி அணிந்து
போலியான உறவுகள் நண்பர்களை நம்பர்களை
அதிகம் சம்பாதிப்பதை விட
உண்மை என்னும் முகமூடி அணிந்துதனியாக
இருப்பது நல்லது ஏனென்றால் பொய் முகமூடி
அணிந்த உறவுகள் போலியாகத்தான் இருக்கு
உண்மையான உறவுகள் தான் என்றும் நிலைக்கும்
உன்னை புரிந்து கொள்ளும் பொய்
அப்படி அல்ல தன்னுடைய நிலைக்கு
ஏற்றபடி முகமூடியை மாற்றிக்கொள்ளும்

Thank you guys
[/b]
« Last Edit: October 02, 2023, 05:48:02 am by Radha »

Malikka32

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
]முகமூடி
முகத்தை மூடும் மூடி முகமூடி.

நிஜ முகத்தை பொய் முகமாக
 பொய் முகத்தை நிஜ முகமாக
காட்டுவது முகமூடி.

நல்ல‌வன் கெட்டவனாகவும்
கெட்டவன் நல்ல‌வனாகவும்
காட்டுவது முகமூடி.

புன்னகை வஞ்சனையாகவும்
 வஞ்சனை புன்னகையாகவும்
 காட்டுவது முகமூடி.

சிரிப்பு வெறுப்புகாவும்
வெறுப்பு சிரிப்புகாவும்
 காட்டுவது முகமூடி.

வாழ்க்கையை லைஃப் என்றோம். மனைவியை ஒய்ப் என்றோம்.
மனைவியை லைஃப் என்றோம்
லைஃப்பை மனைவி என்றோம்.
அடடா எத்தனை முகமூடி

அத்தையை ஆன்ட்டி என்றோம்.
அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.
காதலியை பியூட்டி என்றோம்!
காதலி மனைவி ஆனால்
 ஓர் ஆண்டு பின்னர்
 மனைவியை பேய் என்றோம்.

காதலி மனைவி இல்லையென்றாலும்
 ஓர் ஆண்டு பின்னர்
மனைவியை பேய் என்றோம்.
அடடா மனிதனுக்குத்தான்
எத்தனை முகமூடி.

முத்தத்தை கிஸ் என்றோம்.
அழகை நைஸ் என்றோம் !
அளவை சைஸ் என்றோம்.
மனைவி 363240 என்றால்
 எருமை மாடு என்றோம்.

363240 மற்றவர்கள் என்றால்
 பியிட்டி, என்றோம்.
அடடா மனிதனுக்குத்தான்
 எத்தனை முகமூடி.

முகமூடியை கிழியுங்கள்.
நன் முகத்தை புன்முகத்தோடு மனைவிக்கு அன்பை காட்டுங்கள்.

குடும்பம் செழிக்க முகத்தை காட்டுங்கள்.
முகமூடியை கழட்டுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே.
வாழ்ந்துதான் பார்ப்போமே !
நலமாக வளமாக!!
« Last Edit: October 02, 2023, 08:13:19 am by Maari »