Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 06✨  (Read 1545 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
✨SEASON 06✨
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் ThamizhiniChat Team..!
« Last Edit: October 03, 2023, 12:18:39 pm by Maari »

TNanban

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
    • View Profile
அடி என்னவலே என்ன ஒரு ஆச்சரியம் இன்று !!!
 வானில் புதுவித மாற்றம் ? சூரியனும் சந்திரனும் ஒன்றாக தோன்றுகிறது
 , உன் வீட்டின் வாசக்கதவின் ஓரம்!!!
உன் பால் முகம் காண சந்திரனும்,
உன் பொன்மேனியை காண சூரியனும் தவகோலம்
பூணுகிறார்கள் !!!!
என்னவலே அப்படி என்னதான் செய்தாய் அவர்களை,
உன் மேனி காணாமல் சூரியன் சுடுகிறான்,
உன் முகம் காணா சந்திரன் ஒளி மங்குகிறான்,,
இயற்க்கை மாற்றத்தை உண்டாகுதடி உன் ஒருத்தியாள்
 அந்த இயற்க்கையை விட நீ பேரழகானவளா?
அடந்த காடுகளும்,  மலைக்குன்றும் கொண்டவளா?
அல்ல சிறு நீரோடையை கொண்டவளா?
அப்பப்பா அப்படி என்னதான் உண்ணிடம் இருக்கிறது, தெ‌ரியவில்லை,, ஒருமுறையாவது அவர்களை
பார்த்துவிடு  , இன்னும் அவர்களின் ஆயுள் கூடட்டும்,,,,
உன் ஓரக்கண் பார்வையால்!!!!!!!!!!!!.💐💐💐

,,,




« Last Edit: October 03, 2023, 11:28:30 pm by Maari »

Aradhya

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
"நான் போகின்ற வழி எங்கும் நீயே இருக்கிறாய்
நான் காண்கின்ற இடம் எங்கும் நீயே இருக்கிறாய்
என்னுள் முச்சூ காற்றாகவும் திகழ்கிறாய்.."!

"நீ இல்லையேல் இப்பூவுலகில் எவரும் இல்லை
உன்னை நேசிக்காதாவர் இப்பூலகில் எவரும் உண்டோ.."!

"நான் தனிமையில் வாடும் போதும் என்னுடனே பயணிக்கிறாய்
உன் அரவணைப்பில் என் தனிமை மாறி போனது.."!

"உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை என்னிடம்...!
உன் வர்ண கோலங்கள் அளவில்லாதாது.
வார்த்தை இல்லாத வர்ணமாகி அன்பை மட்டும் போழிந்திடும் அன்னை நீ.."!

"உன்னை நினைக்க நொடிகள் போதும்
 மறக்க வேண்டும் என்றால் மரணம் ஒன்றே
அந்த மரணத்தில் கூட உன் மடியில் சாய்கிறேன்"..!

"நித்தம் நித்தம் இயற்கை நடத்தும் அற்புதத்தை ரசித்தபடி நான்..
இந்த இயற்கை உலகில் தவழ வழி செய்ததே ஒரு வர பிரசாதமே..!😌
 
 




« Last Edit: October 05, 2023, 04:42:55 am by Maari »

Blacked

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +0/-0
    • View Profile
                         "இயற்கை" 
            மீது கொண்ட காதல்

    பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான உன் இயற்கை அழகு...

    தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத அழகு...

    புல்வெளி மேல் படர்ந்திருக்கும் பனித்துளிகள் அழகு....

    சில்லென்று தூறும் மலைச்சாரல் அழகு...

    நொடிக்கு நொடி மூச்சுக்காற்றாய்
சமுத்திரம் கூட எல்லை பறந்து வந்த வானம் வரை மேக மூட்டம் விரிந்து எல்லை அற்று நின்ற அழகு...

    மரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து பாடும் இன்னிசை அழகு....

    மழைக்காலங்களில் மாலையில் வரும் வானவில் அழகு...

     வண்ண வண்ணங்களாய் பூக்கும் பூக்கள் அழகு....

    ஒவ்வொரு நட்சத்திரமும் தினம் தினம் உனை பார்க்க ஒவ்வொரு இரவுகள் முழுவதும் போராட்டம் இயற்கை அழகே..

    இவ்வுலகையே வியக்க வைக்கிறது உன் அழகு...

     இந்த இயற்கையில்
                 பிறந்த
இந்த கவிதையை படிக்கும்"
          "  நீயே அழகு  "
                  என்னை பிடிக்குமா???

         என்றும், அன்றும், இன்றும்......உங்கள் BLACKED

Ms_Fluffles

  • Newbie
  • *
  • Posts: 1
  • Reactions: +0/-0
    • View Profile
எனது கண்களில் கண்ட
     
"இயற்க்கை"

கவிதைகளில் அழகாய்
கருவிழிகளில் பொய்களை அடைத்து
உன் இயற்கை அழகை காட்டும் அற்புதமே...

உன் சூரியனின் பார்வை
தினம் தினம் காணாமல் போவேனோ...

காற்று கூட நின்றுவிடும்,
உன் இயற்கை அசைவில் வரும் தென் மேற்கு பருவ காற்று
என்னை தொடாமல் போவேனோ...

மழை கூட வரும் அந்த வானவில் வண்ணம்
என் சேலையில் படாமல் போவேனோ...

புல்வெளி படார்ந்திட அந்த பட்டு பூக்கள்
என் தலை கோதிட மனம் இடாமல் நான் போவேனோ...

நானும் காதல் செய்வேன் இயற்கையே உன்னை❤️.........
« Last Edit: October 10, 2023, 05:45:02 pm by Ms_Fluffles »

Tiso20

  • Newbie
  • *
  • Posts: 11
  • Reactions: +0/-0
    • View Profile
"இயற்க்கை ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் மிகவும் அற்புதமான முறையில் உறவாக பங்கு எடுத்துகொள்ளும்."

"சில மனிதர்கள் சூரியனின் ஒளி போல், பிறரின் வாழ்விற்கு வெளிச்சம் போல் இருப்பார்கள்."

"சில மனிதர்கள் நள்ளிரவில் இருக்கும் நிலவின் வெளிச்சம் போல், பிறரின் இருள் சூழ்ந்த வாழ்வின் ஒரு வழிகாட்டி யாக இருப்பார்கள்."

"சில மனிதர்கள் இரவில் இருக்கும் நட்சத்திரம் போல், பிறரின் வாழ்வின் தனிமை திற்கும்  நட்சத்திரம் ஆக மாறிவிடுவார்கள்"

"சில மனிதர்கள் இந்த உலகில் காட்டில் இருக்கும்  மரங்கள் போல்,  பிறரின் வாழ்விற்கு மூச்சு காற்று ஆக மாறிவிடுவார்கள்"

" இயற்க்கையின்  இவ் குணங்கள் கொண்ட மணிதர்களை, நம் தமிழினி  மற்றும் WTC எனது வாழ்வின் ஒரு பொக்கிஷம் ஆக தந்துள்ளது அதற்கு மிகவும் நன்றி "

"இந்த கவிதை நாம் WTC மற்றும் தமிழினி
நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு அர்ப்பணிக்கிறேன்"

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
இயற்கை ஆச்சர்யத்தின் உச்சம்

தென்றலாய் தீண்டி மகிழ்வித்த நீயே புயலாய் பயந்து பதுங்கச் செய்தாய்

பகலவனோ ஒளி கொண்டு ஓட செய்த நீயே இரவில் இருள் கொண்டு ஓய்வுற செய்தாய்

சிறு துளி நீர் கொண்டு மழையால் மணல்பாடுகையும் மல்லிகை போல் மணக்க செய்தாய்

செயற்கையால் உன்னை வென்றதாய் மார்த்தட்டிக் கொள்ளும் சில மனிதர்கள் ஒளியாண்டு காலம் எடுக்கும் அறிந்து கொள்ள உன் படைப்பின் அணு அளவு கருவின் உருவாக்கமே அவை என்று

சூட்டெரிக்கும் சூரியன் என்று முகம் சுழித்த போதும் அணு கதிர் கொண்டு அண்டம் காக்க தவறியதில்லை

இரு முறை சுற்றி வந்து தலைசுற்றி தடுமாறி வியக்கிறேன் உன் அதிர்வில்லா சுரலை கண்டு

உன் அழிவில் வாழ துடிக்கும் மனிதன் ஆட்டம் கொள்வான் உன் கோபம் அறியும் நொடி

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
❤️இயற்கை என்றாலே அழகு தான்❤️
இயற்கையை ரசிக்க தெரியாதவர்கள்
மனிதர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்....
நம் கடவுளின் படைப்பில் அற்புதம் தான் சொல்ல வேண்டும்
பகலில் சூட்டு எரிக்கும் சூரியன் போல
தான் எனது கள்வனின் கண்களை பார்த்தால்
தோன்றும் அதே போல் இரவின் குளுமையும்
நிலவின் அழகையும் ஒத்த ஆளுபவன் போல
தெரிவான் அந்த கல்லலன்.
❤️இயற்கை ரசிக்க ரசிக்க
இன்பம் மட்டடுமே தரும் அதே போல
அவனை அவனுக்கே தெரியாமல் ரசிக்க ரசிக்க காமத்தையும்
தாண்டி காதலையும் மிஞ்சும் அளவு
அன்பும் அரவணைப்பும் உணர்தேன்
மழையை ரசிக்க முடியும்
ஆனால் புயலை ரசிக்க முடியாது
ஆனால் எனவனுள் இருக்கும் கோபம்
தாபம் கனிவு ஆளுமை அழுகை என்று அனைத்தையும் ரசிக்குறேன்...
சந்திரன் எல்லாம் நாளும் வருபவன்
தான் அனாலும் ஒரு ஒரு நாளும் புதிதாய்
பார்ப்பது போல தான் பார்க்கிறோம்
என்னவனை அதே போலா தான்
நானும் பார்க்கிறேன் தினமும் ஒரு விதம் பரிமாணத்தில்....
நிலவு இல்லா வானம் வெறுமையை
சுமக்குமோ அதே போல் என்னவனை
பார்க்காத நாள் என் இதயம் வெறுமையும் கூடுதலாக
வெருப்பையும் சுமந்து நிற்கின்றது....
❤️மோகம் தேய்பிறையை போல்
தேந்தாலும் காதல் வளர்பிறையை போல் வளரும் நம்மில் இதை இயற்கையின் அற்புதம் என்று தானே சொல்லமுடியும் கோவம் கொண்டாலும் காதலை மட்டும் தர இயற்கையால் மட்டுமே உண்டன அதிசயம் ❤️

 🫀கள்வனை களவாடும் கனவு காதலி🫀
[/b]
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥