Author Topic: 💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 09 ✨  (Read 1725 times)

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
✨SEASON 09✨
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் WTC Team..!

Jackey pondiyan

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +1/-0
  • Vazhkai vazhvatharkee
    • View Profile
நீயா நானா என்பதல்ல! நீயும் நானும் என்பதே! இல்வாழ்க்கை

எல்லா நேரங்களிலும் மனம் விட்டு பேசுவதற்கும், அன்பு காட்டுவதற்கும், ஓர் உறவு கிடைத்து விட்டால், வாழும் வாழ்க்கை சொர்க்கம் தான்.

அழகான அறிவார்ந்த பெண் மனைவியாக அமைவது அதிர்ஷ்டம் மட்டுமே! அமைந்த மனைவியை ஆயுள் வரை கண் கலங்காமல். அழகாக வைத்திருப்பதே ஆண்மை!

பாலோடு கலந்த தேனாக
பாசத்தோடு இணைந்த உயிராக
வானோடு சேர்ந்த நிலவாக
மண்ணோடு நிறைந்த உறவாக
கலந்தோம் என்றும் குடும்பமாக.....

குடும்பத் தலைவன் தந்தையும்
குலத்தை காக்கும் அன்னையும்
தோளில் சுமக்கும் பாட்டனும்
தோள் சாயும் பாட்டியும்
அன்பை கொடுக்கும் அக்காவும்
ஆதிக்கம் செலுத்தும் தங்கையும்
வம்பு செய்யும் தம்பியும்
வரம் கொடுக்கும் அண்ணனும்
உறவுகளாய் இணைந்திருந்தால்
விண்ணில் உள்ள சொர்க்கம் அது
மண்ணில் வந்து சேர்ந்திருக்கும்.....

எத்தனை எத்தனை உறவுகள்....
அதில் எத்தனை எத்தனை வரவுகள்....

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ...


TQ Urs Jacky pondian,
Song Request,

ஆயிரம் ஜன்னல் வீடு…
இது அன்பு வாழும் கூடு…
ஆலமரத்து விழுது…
இதன் ஆணி வேரு யாரு. 8)

« Last Edit: December 03, 2023, 01:47:18 pm by Maari »
♥️Murrattu kaalai♥️

Senorita

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +0/-0
    • View Profile
அனுசரணையான அன்பாலயம்
அறிவுரைகளின் அட்சய பாத்திரம்
அக்கறையின் பிறப்பிடம்
ஒற்றுமையின் புகலிடம்
வேற்றுமையில்லா அன்பு...!

கலகலப்புக்கு பஞ்சமில்லை
சலசலப்புக்கும் பஞ்சமில்லை
தினம் தினம் சந்தோஷம்
திடீரென வரும் கொண்டாட்டம்
என்றும் துணையிருக்கும் உறவு...!

எதிரிக்கும் உதவும் குணமுண்டு
இளமையில் தெளிவு உண்டு
இனிமையான இயல்பு உண்டு
கவலைகள் ஏதுமின்றி மிதப்போம்
கடவுளின் உருவாய் இருப்போம்...!

காதலுக்கும் கூட எதிர்ப்பு இல்லை
லாவகமாய் புரிய வைக்கும்போது 
யார் மனமும் காயப்படாமல்
கனவு கை கூடும் வாய்ப்புண்டு
மறக்காத காயங்கள் இல்லை
நீயா நானா விவாதம் இல்லை
கடந்தனவற்றை நினைக்க கூட நேரமில்லை...!

சுமைதாங்கியாய் ஏந்தும் கரங்கள் உண்டு
தனியே மனம்குமுறும் நிலையும் இல்லை
உரையாடல் உறவாடி கிடக்கும்
நம்பிக்கை விளைந்து கிடைக்கும்
விசேஷமும் விழாவாகும்
விழாவும் பிரமாண்டமாகும்...!

அன்பு கரங்கள் கைகோர்க்க
ஒற்றுமை எனும் கூட்டுறவில்
நான் இருக்கேன் பார்த்துக்குறேன் -என்கிற
வசனம் இல்லம் எங்கும் எதிரொலிக்கும்...!

துன்பங்கள் தூரத்தில் நிற்க
இன்பங்கள் இணைந்தே இருக்க
யாரையும் மதிக்கும் குணம் இருக்கும்
யாவரையும் அரவணைக்கும் மனம் இருக்கும்
இந்த அலாதியத்தை அனுபவித்தவர்கள் – இதை
அறிந்தவர் இணைந்தே இருப்பர்…!

கூட்டுக்குடும்ப அன்பில் திளைப்பவர்கள்
கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்களே…!
   

« Last Edit: December 03, 2023, 01:47:49 pm by Maari »

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 24
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும்
குடும்பத்தின் மகிமையை அறியும்
 மனிதர்களை விட உயிரினங்களிடம் அறியலாம்
 குடும்பமாக வாழ்வதற்கு
நாம் கவலையின்றி வாழ
தன் கவலைகளை மறைத்து
சுமை தாங்கும் தந்தையும்
ஆறுதல் கூற அன்னையும்
 சண்டையிட சகோதர சகோதிரியும் இல்லாமல்
வாழ ஆண்டவனாலும் முடியாத ஒன்று
 சில தருணங்களில்
சில உறவை இழக்க நேரிடும்
இருக்கும் உறவை
 பாதுகாக்க என்றும் மறவாதே
தேன் கூட்டை கலைக்கும்
கல் போல சில கசப்பான
 தருணங்கள் வரும்
 அவைகளை கடந்து
 மீண்டும் தான் கூட்டை கட்டும்
தேனீ போல
குடும்பங்களை பாதுகாத்து
கட்டிக்கொண்ட இருங்கள்
 வாழ்க்கை சுகமானதாக இருக்கும்
« Last Edit: December 03, 2023, 01:48:15 pm by Maari »

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
கூட்டு குடும்பம் என்றாலே என் நினைவில் வருவது என்னது சிறு வயதில் கூட்டு குடும்பத்தில் வளர்த்த ஞாபகம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள்
தாத்தா பாட்டி வீட்டின் முதன்மை வகித்து தன் குடும்ப அனுபவத்தை சொல்லி குடுத்து நல்லது சொல்லி தந்து சமூகத்தில் நல்ல நிலைமையில் பண்படுத்துவார்கள்.
கூட்டு குடும்பத்தில் பெற்றவள் மட்டுமே அன்னை என்று சொல்ல மாட்டார்கள்
பெரியம்மா சித்தி எல்லோரும் அன்னையாகவும் பெரியப்பா சித்தப்பா தந்தையாகவும் பாசத்தை காட்டுவார்கள்
தங்கைகள் அண்ணன்களுக்கு இளவரசியாக
பார்த்து கொள்வார்கள் தங்கையின் மகளை மருமகளை இல்லாமல் மகளாக அரவணைத்து மாமன் தோள்ளில் தூங்குவாள் அத்தை மடி மெத்தையாக இருக்கும் பேரன் பேத்திகளுடன் தாத்தா பாட்டியும் குழந்தைகளாக பிறந்து வளர்வார்கள் குழந்தைகளின் மழலை சிரிப்பில் அவர்கள் பேரானந்தம் அடைவார்கள் முதியோர் வழி காட்டுதலில் சிறியவர்கள் வளர்வார்கள்
 தம்பிகள் அக்காளுக்கு குழந்தைகளாக செல்ல சண்டைகள் செல்ல முறைப்புகள் ஒரே வீட்டில் இருந்தாலும் மாமன் மகனை பார்க்க அத்தை பெண்களில் வெக்கம் அழகு.எங்கள் குருவி கூட்டில் என்னவனை இணைக்க ஆசை கொண்டேன் மருமகனாக அல்ல மகனாக என்றும் நீங்க கனவு காதலி
[/b]
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

Ramya

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +6/-0
    • View Profile
குடும்பம் இது வார்த்தை இல்லை ஒரு உணர்வு

இங்கு அன்னையின் அன்பு உண்டு
தந்தையின் அரவணைப்பும் உண்டு
தாத்தாவின் கருணை உண்டு
பாட்டியின் பணிவும் உண்டு
அண்ணனின் அதட்டலும் உண்டு
தம்பியின் சண்டையும் உண்டு
தங்கையிடம் சின்ன பொறாமையும் உண்டு
சித்தி சித்தப்பாவின் கண்டிப்பும் உண்டு
மாமா அத்தையின் பாசமும் உண்டு
இன்னொரு தாயாய் அக்காவின் அக்கறையும் உண்டு
இந்த உலகில் வாழ்வதற்கு இதை விட வேறு என்ன வேண்டும்

இது வெறும் குடும்பம் மட்டும் அல்ல என் உலகம்

இந்த கவிதை என் WTC குடும்பத்திற்கு சமர்ப்பணம் 😍😍😍💓
« Last Edit: December 03, 2023, 01:48:40 pm by Maari »
💓💖 ரம்யா 💖💓

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
இறப்பு வரை சொர்க்கத்திற்கு காக்க வைக்காமல் இறைவனின் இரக்கத்தில் கிடைத்த வரம் கூட்டு குடும்பம்

தந்தையும் தட்டி கேக்க தயங்கும் தவறையும் செவுல் அரைவில் உணர செய்யும் சிற்றப்பன் உரிமை

தவறு என் பக்கம் இருப்பினும் அவன் அறிய பிள்ளை தோள் குடுத்து துணை நிற்கும் மாமனின் தோழமையில் தோழனும் தோற்று போவான்

அன்னை சிறு கோப நேரத்திலும் தன் மடி தந்து மாய சொற்கலால் சிறு பிள்ளையை உணர செய்கிறது அத்தையின் பாசம்

அறிய பருவம் முதல் எவ்வுணர்வும் இல்லா விளையாடிய பொழுதும் மாமான் மகள் என்னவள் என்ற குடும்ப கேலி சொற்களில் சிறு சிரிப்புடன் வெட்கிய தருணம் சொல்ல மொழி இல்லை

சிறு சிறு சண்டைகளிலும் ஓவருவரை ஒருவர் விட்டு தரா குடும்பம் தனி ஒரு அடையாளம் இழந்த போதும் குடும்பமே அடையாளம் ஆகிறது
« Last Edit: December 03, 2023, 01:48:58 pm by Maari »

Tiso20

  • Newbie
  • *
  • Posts: 11
  • Reactions: +0/-0
    • View Profile
இந்த வரிகள் பாத்ததும் நம் அனைவர்க்கும் நினைவில் வருவது நமது  இளமை  பருவம் தான்.. இன்று நம் சில  தனித்தனியாகவும் நம் குடும்பத்துடனும்  இருந்தாலும்..... வாழ்வின் ஒரு சில காலகட்டத்தில் கூட்டு குடும்பமாக  தான் இருந்துருப்போம்.......நம் தாத்தாவின் கம்பிரமான மீசையாக இருக்கட்டும் இல்லை அவரின் பாசமான ...அன்பு பரிசாக இருக்கட்டும்....நம் பாட்டியின் செல்ல முத்தங்கள் ஆகட்டும், இல்லை  அவர்களின்  கொஞ்சி கொஞ்சி நமக்கு உணவு ஊட்டும் விதமாக இருக்கட்டும் இது தான் முதலில் நினைவுக்கு வருகிறது.....நம் மாமா வின் அளவுக்கு அதிகமான..... பாசமாக இருக்கட்டும் நம் அத்தையின் அன்பாக இருக்கட்டும்... , நம் சித்தப்பாவின்... துணை அகா இருக்கட்டும் நம் சித்தியின் .... அக்கறையாக இருக்கட்டும். இதுலாம் கண்டு நம் தாய் தந்தையின்... சற்று பொறாமை கூட ஒரு அழகு தான். இதை போல் தான் அண்ணாண் தங்கை..... அக்கா தம்பியின் சண்டைகள் அத்தை மகளை  மாமன் மகன்கள் இவர்களின் சீண்டல்கள் கூட ...... ரசிக்க வைக்கும்...இதை போல் ஒரு கூட்டுக்குடும்பம் வாழ்ந்துவிட்டு ..... தனித்து இருக்கும் நேரங்களில் நம் WTC குடும்பம் கூட ஒரு கூட்டு குடும்பம் போல் ஒரு உணர்வு குடுப்பது மிகவும் அற்புதமாகாக இருக்கிறது....
இந்த வரிகள் நம் WTC உறவுகளுக்கு சமர்ப்பணம்....

By Ungal Vedha .......🙈💛✨️
« Last Edit: December 03, 2023, 01:49:18 pm by Maari »

Mayuu

  • Newbie
  • *
  • Posts: 6
  • Reactions: +1/-0
    • View Profile
Hi frnd
உணவு உண்ணும் போது
அந்த உணவில் கூட கூட்டு
இருந்தால் தான் அந்த
உணவுக்கு சுவையைக் கூட்டும்.
அதுபோலத் தான்
வாழ்க்கையில் சந்தோஷம் நம்மிடத்தில் அதிகரிக்க
 கூட்டுக் குடும்பமாக இருந்தால் தான்
 நம் வாழ்க்கை சுவையைக் கூட்டும்.
நம்முடைய சுதந்திரம், சந்தோஷம்,
ஆடம்பர. வாழ்க்கை. வேலை.
இவற்றிற்காக நம் தாய். தந்தையை
கவனிக்காமல் முதியோர் இல்லத்தில்
விட்டு விட்டு இன்று
 எல்லாம் இருந்தும் அனாதையாக திரிகிறோம்.
சொந்தங்கள் கூடினால் சுகமாகும்
 துன்பங்கள், துயரங்கள்
மறந்து மகிழ்ச்சி பெறுகும்.
மனதில் உள்ள பாரங்களை சோகங்களை
நெஞ்சுருக. பகிரவும்
மகிழ்ச்சியை எல்லாரும் கூடி அனுபவிக்க
கூட்டுக் குடும்பம் காக்க

Rapunzel

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +0/-0
    • View Profile
குடும்பம்-உண்மையான அன்பின் வடிவம் ✨✨ முழு மகிழ்ச்சியான குடும்பம்
நம் அன்புக்குரியவர்களால் சூழப்பட்டுள்ளது... நம் மன அழுத்தம் & டென்ஷன்கள் அனைத்தையும் நீக்குகிறது...😌😌. அது சுயநலமாக இருப்பதைத் தவிர்க்கிறது... மேலும் மதிப்புமிக்க நெறிமுறைகளை நாம் கற்றுக் கொள்ளும்போது...💙💙
நல்ல விஷயங்களைப் பகிர்வது மட்டுமல்ல... கடினமான நேரங்களிலும் ஒன்றாக இருப்பதுதான் கூட்டுக் குடும்பத்தின் உண்மையான உறவு...🙌🙌
சிறப்பு வாய்ந்தவர்களுடன் இருப்பது தனிமையின் உணர்வை நீக்குகிறது... நிறைய மகிழ்ச்சியைத் தருகிறது..💃💃
இறுதியாக, எங்கள் கூட்டுக் குடும்பத்திலிருந்து நாம் பெறும் அன்பின் பந்தம்... எப்போதும் நம்மை மிகவும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் உணர வைக்கிறது..   
« Last Edit: December 03, 2023, 01:49:47 pm by Maari »