கடவுள் எழுதிய முதல் கவிதை...... நிலா!!!!
ஆகாயத்திற்கு அழகு நீ..! அதிசயத்தில் ஒன்று நீ..! சேதாரம் இல்லாத சொக்கதங்கமாய் கவிஞர்களுக்கு கிடைத்த கற்பனை சுரங்கம் நீ. ...!
எட்டாத உயரத்தில் இருந்தாலும் அனைவரது எண்ணங்களையும் எட்டி பிடிக்க வைப்பது நீ....!
மாடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய்! தெருக்கோடியில் இருப்போரையும் மகிழ்விக்கிறாய் நீ....!
ஆகாய சமஸ்தானத்தில் இரவை ஆளும் அரசி நீ...!
ஆகாயம் இருந்து கீழே இறங்கி வந்தாள் ... ஆண்களையும் காதல் வசபடுதுவாய்.... பெண்களையும் பொறாமைகொள்ள வைக்கும் பேரழகி நீ....!
ஒப்பனைகள் செய்து தன்னை அழகு என நினைக்கும் பெண்கள் மத்தியிலும்,பல ஆண்களின் கனவு தேவதையும், கவிதை தேவதையும் நீ...!
காகித எழுத்தாய் கரையும் கனவுகளுக்கு உயிர் தர வந்தாயோ! இல்லை காணாமல் மறைந்த கனவுகளை தேடி தர வந்தாயோ நீ...!
சிலநாள் இருளாக... சிலநாள் வெளிச்சமாக... சில நாள் தேய்ந்து தேய்பிறையாய்! சிலநாள் பூரித்த தேகம் கொண்ட வளர்பிறையாய் நீ...!
அன்னையவள் தன் அன்பு பிள்ளைக்கு நெய் ஊறிய பருப்பு சாதத்தை பக்குவமாய் பார்த்து ஊட்டிடவே பாங்குடனே தான் பறந்து வந்தாயோ? நீ...!
வண்ணம் இல்லாமல் வானில் வரைந்த சித்திரமாக, வாடாத மலராக இரவு வானில் உலாவருவதும் நீ...!
ஆம்... நிலா ஓரு பெண் தான்....!
மூக்கும் இல்லை முழியும் இல்லை ஆனாலும் அழகு பெண் நீ தான் நிலா…
நட்சத்திர பூக்களின் அர்ச்சனையிலே வான் வீதி உலா வருபவள் நீ...!
தனிமையின் சுகத்தை தனியே பெற விடாமல் உடன் துணையாய் இருக்க வந்தவளும் நீ...!
சில்லென வீசும் தென்றல் காற்று கூட சிலிர்க்க செய்வதில்லை என்னை சிலிர்க்க செய்யும் பிம்ப வடிவம் நீ...!
உன் ஒளி முகம் காட்டி! இருளை ஓட்டி! வட்ட பந்தாய் வானில் மிதந்து எட்டாப் பறக்கும் வான் மகளோ நீ...!
பகல்லாம் பாடுபட்ட பகலவன் சற்று ஓய்வெடுக்க ..இரவெல்லாம் ஒளி தந்து இவ்வுலகம் காக்க வந்தது நீ...!
இவ்வளவு அம்சம் கொண்ட நிலாவை வானதிலேயே தங்கவைத்து அனைவரையும் ஏங்கவைத்த கடவுளும் கள்நெஞ்சகாரனே....
விண்ணை தாண்டி மண்ணில் வருவாயா...!
நானும் பாடுகிறேன்...
நிலா நிலா ஓடி வா... நில்லாமல் ஓடி வா....!🦋