மகளதிகாரம்
எனது கனவு மகள்க்கு...
அழகிய என் மகளே அன்பாய் ஓர் கடிதம்,
கருவில் நீ வந்த, காலம் முதலாக, கனவும் நீயின்றி இல்லையடி !
கண்ணே...
நட்சத்திரங்கள் மின்னும் ஒளி வானுக்கு அழகு
என் செல்ல மகளின் முக சிரிப்பொலி இல்லத்துக்கு அழகு.எப்போ வரமோ அந்த நாள்.
பிறக்கும் போதே பொன் குழந்தையாகிறார்கள் எனது தேவதை...
தூக்கம் விழித்த பாதி இரவுகளில், மகள் நெற்றி முத்தமிட்டு
மறுதூக்கம் செல்கையில் சொர்கமாகிறது அவ்விரவு..எப்போ வரமோ அந்த நாள்.
உன் பிஞ்சு கைகோர்த்து, நெஞ்சம் மகிழ்ந்த கதை,
நினைக்கும் போதெல்லாம் இனிக்குதடி ...எப்போ வரமோ அந்த நாள்.
முன் விழுந்த இரட்டைப் பற்களின் வழியே கொட்டுகிறது முத்துக்கள் அவள் பேச்சுக்களாக.... ...எப்போ வரமோ அந்த நாள்..
ஒற்றை முத்தத்தில் இரட்டைச் சத்தங்கள் மகள்பேறு மாதங்களில் ….
அவள் மடி தாண்டா மகளுக்கும், என் மனம் தாண்டா என்னவளுக்கும்....
எப்போ வரமோ அந்த நாள்..
எப்போ வரமோ அந்த நாள்..
எப்போ வரமோ அந்த நாள்..
I'm Urs Rocket 👑 Raja