Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Blacked

Pages: [1]
1
   *இப்புகை படத்தில் வரும்  ஒரு ஒத்தை அடி பாதை,  அதில் ஒரு ஆவியாக நிற்கும் பெண்,  சுற்றி அடர்ந்த காடு, இருள் சூழ்ந்த இடம்....என்னவாக இருக்கும்?

        (இது என் கவிதை)

ஒத்தை அடி பாதை:-
    யாரும் வராதா பாதை நான்..
   என் பாதையில் நீயும் வந்தால் உன் மௌனம் கூட என்னிடம் பேசும்..
    தனிமைகள் கூட எனக்கு சொந்தம்..
   போ! நானே உன் பாதை.... தொடக்கமும் நானே முடிவும் நானே ........

ஆவியாக நிற்கும் பெண் :-
    பிறப்புக்கும் நானே, ஆணின் பலமும் நானே எல்லாம் நானே...
    சோர்ந்து போகிறேன் இறந்த பின்பு கூட..
    வழியில் விட்டுச்சென்றேன் சில நம்பிக்கையோடு வலிக்கும் என்று நம்பிக்கையே போனது...
     இந்த இருள் கூட எனக்காக தான் காத்திருக்குமோ நினைத்து வந்தேன் ஆனால், நான் நின்றேன் இருளில்! நானே இருளாகினேன்......

அடர்ந்து காடு :-
    விண்ணை  முட்டும்
மரங்கள்..
   ஒளிகூட  ஊடுருவ  சிரமப்படும்..
    வருடத்தில் வரும் நாட்களின் 
தேதி கூட இல்லை,
எத்தனை  நாட்கள்
கழிந்தன என்ற
அக்கறையும்  இல்லை ..
    தனிமையில்  முடிவில்லாமல்
நீண்டு கொண்டிருந்த
இருளை தூங்க விடாமல் ரசிப்பவன்...

இருள் சூழ்ந்த இடம் :-
    பயத்தின் சாணக்யான் நான்..
    உலகமே உறங்கியும் அமைதியற்று விழித்து பார்க்கும் என் இருளில் உன் பயம் தான் எனது பலம்..
    என்னை விட்டுப் போனால் வெலுச்சம் தான் மிச்சம் ஆனால் என்னை தேடி வந்தால் தனிமையே உச்சம்...
     நீ பிறக்கும் முன் உனது இருளும் நானே, உன் கல்லறையில் எட்டிப் பார்த்தவனும் நானே..

Disclaimer
     இந்த கவிதையில் வரும் எல்லாம் எனது கற்பனையே  முழுக்க முழுக்க கற்பனையே....
           
          இப்படிக்கு
                 அன்றும்
                    இன்றும்
                       என்றும்
     "நியாபகம் வருகிறதா இவன் யார் என்று தெரிகிறதா உங்கள்"
                         ...............................
                           :😎BLACKED😎:
                         ...............................

2
"எதிர் வீட்டில் இருந்து  எனை எட்டி பார்க்கும் பெண்ணே"

கண்களில் கண்ட அன்பு இன்று!!!
       கவிதைகளில் உன்னை ...

   எனை பார்க்கும்.
உன் கருவிழிகளில் என்னை அடைத்தாயே கருணையே இல்லமால்...
     
    கண்கள் பாட்டம்பூச்சிப் போல சிறகுகள் அடித்து எனை பார்ப்பவலே நீ...

    மைகளால் சூடிய அவளது இமைகளின் பேரழிகியோ இவள்...

  ஒரு பாலம் போல ஒற்றை கோபுரம் அவளின் மூக்கு..மூன்றாம் பிறை நிலவில் மறைந்து விடும் அவள் மூக்குத்தியில்...

    ஆயிரம் மலர்களின் இதழ்கள் மலர்ந்ததை  போல கண்டேன் அவளது இதழின் சிரிப்பில்...

    கல் கூட கரைந்துவிடும் உன் முன்னே ...
    உருகும் பனி கூட உன் மூச்சு காற்றில் பணியாக மாறி விடும் உன் முன்னே...

     "ஓஓஓ பெண்ணே "

இதை கவிதை என நான் சொன்னால் கல் கொண்டு அடிப்பார் பின்னே
     "ஹா ஹா ஹா "
நான் ஓடி விடுகிறேன் அதற்கு முன்னே....

Disclaimer
      இந்த கவிதையில் வரும் பெண் முழுக்க முழுக்க கற்பனையே. என் எதிர் வீட்டிலும் யாரும் இல்லை. இங்கு யாரையும் தொடர்பு கொள்ளும் வரிகளும் இல்லை.....

          அன்றும்
             இன்றும்
                என்றும்
                            " BLACKED"

3
                 "விட்டுப்பிரிந்தாய்"
                      "விட்டுச்சென்றாய்"

    வான்வெளியை விட்டு மண்ணே நழுவி கீழே
விழுந்ததேன்.....
         விட்டுப்பிரிந்தாய்!

    மரமாய் என்னில் சிறு சிறு இலையாய் சேர்ந்தாய்!
    காலம் மாற சிறு சுவடுகளே தெரியாமல் விட்டுப்போனாய்!


    பசிக்கு மண்ணை
அள்ளி தின்றேன்!
உன்னை பார்க்கும் முன்பு...
    உன் பாதம் தொட்ட
மண்ணை அள்ளி தின்றேன்!
உன்னை கண்ட பின்பு...
          விட்டுச்சென்றாய்!!

   சொட்ட சொட்ட குடைக்குள் மழையில்  நனைந்தேன் நனைந்தேன்!
   கண்ணீர் கலந்து  கடல் நீர் மட்டமாக தரை தொட்டு விட்டுப்போனாய்!

     கருமேகமாக இணையக் கண்டேன்!
     வெள்ளை மேகமாய் விட்டுச்சென்றாய்!

    உன் வெலுச்சம் தேடியே நிலவே!
    இரவை தொலைத்து பகலில் சூரியனாய் வந்தேன் விட்டுச்சென்றாய்!!

    நான் பார்க்கும் திசை
எல்லாம் நீ  பதித்த நினைவுகள் தோன்றுதே!
    கண்கள் சேர்க்கும்
கண்ணிர் எல்லாம் நான் நினைக்க
காலம் ஓடுதே!

             "விட்டு பிரிந்தாயே"

      இப்படிக்கு
            அன்றும்💖
               இன்றும்❤️
                    என்றும்💖
                                😎 "BLACKED"😎
          Disclaimer
🚫இந்த கவிதையில் வரும் இயற்கை கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே யாரையும் தொடர்பு கொள்ளும் வார்த்தைகளும் இல்லை...🚫
     

4
                         "இயற்கை" 
            மீது கொண்ட காதல்

    பேசாத மொழி ஒன்றில் காவியமா
தானாக உருவான உன் இயற்கை அழகு...

    தாய் இன்றி கருவான ஓர் உயிரா ஆதாரம் இல்லாத அழகு...

    புல்வெளி மேல் படர்ந்திருக்கும் பனித்துளிகள் அழகு....

    சில்லென்று தூறும் மலைச்சாரல் அழகு...

    நொடிக்கு நொடி மூச்சுக்காற்றாய்
சமுத்திரம் கூட எல்லை பறந்து வந்த வானம் வரை மேக மூட்டம் விரிந்து எல்லை அற்று நின்ற அழகு...

    மரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து பாடும் இன்னிசை அழகு....

    மழைக்காலங்களில் மாலையில் வரும் வானவில் அழகு...

     வண்ண வண்ணங்களாய் பூக்கும் பூக்கள் அழகு....

    ஒவ்வொரு நட்சத்திரமும் தினம் தினம் உனை பார்க்க ஒவ்வொரு இரவுகள் முழுவதும் போராட்டம் இயற்கை அழகே..

    இவ்வுலகையே வியக்க வைக்கிறது உன் அழகு...

     இந்த இயற்கையில்
                 பிறந்த
இந்த கவிதையை படிக்கும்"
          "  நீயே அழகு  "
                  என்னை பிடிக்குமா???

         என்றும், அன்றும், இன்றும்......உங்கள் BLACKED

5
     ! முகமூடிய பத்தி கவிதை சொல்ல முடியாது...

    ! ஏன் தெரியுமா கவிதையே ஒரு முகமுடி தான்...
   
   ! இந்த முகமூடியை ப‌ற்‌றி எழுதுவதும் நானே,
 நானே முகமூடி தான்...
     
     ! ஏன் இதை படிக்கும் நீங்கள் ஒவ்வொரும் முகமுடி தான்...

  "கர்வமாக சொல்கிறேன்"
 
    ! தான் ஒரு தலையாக காதலித்த பெண்ணை தன் நண்பன் விரும்பி மணக்க போகிறேன் என்று சந்தோஷ பட்ட அந்த மனம் உள்ளவன் கூட முகமுடி தான்...

      ! தனது சகோதரி திருமணத்திற்க்காக தன் படிப்பை கண்ணீருடன் விட்டவனும் முகமுடி தான்...
   
    ! உறவுகள் இருந்தும், நண்பர்கள் இருந்தும் தனக்கு தோல் குடுக்க யாரும் இல்லை என்று தெரிந்தும்... தனி ஒருவனாய் நானும் வாழ்வில் சாதித்தேன், அவனுக்குள்ளே இருப்பவனும் முகமுடி தான்...

    *உங்கள் முகமுடி நான் blacked இது எனது சொந்த முகமுடி இத இங்க சொல்ல என‌க்கு ஒரு முகமுடி கிடைச்சது அந்த முகமுடி இதான்..... இத படிக்கிற ஒவ்வொருக்கும் ஒரு முகமுடி இருக்கன் அவன் கூட பேசுங்க Life ஹாப்பி இருக்கும்........
        இப்படிக்கு
                    Blacked

6
"கவிதை எழுத வந்தேன் அடியேன் நானும் இனிய தனிமை தான்"

   ! ஆறு மணி துளிகள்   சூரியனை எழுப்பினாலும்
சூரியனே தனிமை தான்.....
    ! அவன் விழிகளின் விடியலுக்காக காத்திருந்த இரவு தூக்கத்தை தொலைத்த நிலவே தனிமை தான் ........
   
   ! தனிமை இனிமையானது என்று நிழல் கூட தனிமையை தேடி தான்....

      ! பல நாள் அழுதேன் அவள் அன்பை தேடி துடிக்கும் இதயம் கூட தனிமை தான்....

     ! எந்த நொடி நீ வருவாய் என்று தெரியவில்லை?. "பெண்ணே" ஆனால், நீ வருவாய் என்று ஏங்கும் என் உள்ளம் கூட தனிமை தான்....

   ! அடியே நீ இல்லை என்று விட்டு போனாய் என்னிடத்தில்.. ஆனால் உனக்காக நான் இருக்கிறேன் என்று சொன்னது என் இனிய தனிமை தான்....

    ! என் துன்பத்தில் என் புலம்பல்களை பொறுமையோடு கேட்பவனும் என் இனிய தனிமை தான்....

     ! இதை படிக்கும் நீயே தனிமை தான்...

         ...... இப்படிக்கு
                       BLACKED.....

Pages: [1]