Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 03✨  (Read 1581 times)

thamizhinichat

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 10
  • Reactions: +0/-0
  • ꧁༒🦋ANNA&PAPA🦋༒꧂
    • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 03✨
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐Season 03✨
✨SEASON 03✨
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் ThamizhiniChat Team..!
« Last Edit: September 18, 2023, 11:04:54 am by Maari »

Aadhira

  • Newbie
  • *
  • Posts: 19
  • Reactions: +0/-0
  • ꧁༒♛MACHISSS♛༒꧂
    • View Profile
என் வாழ்வின் முதல் காதல் அப்பா
என் பாதங்கள் பூமியில் பதியும் முன்
நெஞ்சில் வாங்கி கொண்டாயே, அப்பா.
வாய் திறந்து பேசிய மழலை மொழியை
செவி வழி கேட்டறிந்து இன்புற்றாயே, அப்பா.

தவழ்ந்து வளரும் பருவத்தை
அருகில் இருந்து பாராமல்
எனக்காக ஓடிச் சென்று உழைத்தாயே, அப்பா.
பள்ளியில் நான் பெற்ற அடி, உனக்கும் வலித்ததோ..
என் மகளை காயப்படுத்தும் ஆசிரியரின் கண்டிப்பும்
தவறு தான் என்றாயே, அப்பா...

இரவு பயணங்களில், கண் உறங்கியதில்
கண் விழித்து பார்த்தேன் படுக்கை அறையில்...
பருவ பெண்ணாக வளர்ந்தாலும், நீ என்னை குழந்தைப்
போல் கையில் ஏந்தி சென்ற நாட்கள் எத்தனையோ...

கல்யாணம் என்ற பேச்சு வார்த்தை,
ஏன் உன் முகத்தில் இவ்வளவு வேதனை,
உன்னை விட்டு பிரியும் நிலை
வாழ்வில் என்றுமே எனக்கு வராது... அப்பா
இது ஒரு தந்தைக்கு மகள் செய்து கொடுக்கும் சத்தியம்.

வாழ்க்கை என்ற ஓட்ட பந்தையத்தில் நானும் உன்னோடு சேர்ந்து ஓடுகிறேன்...
விழுந்தாலும், கை கொடுத்து தூக்கி விடுகிறாயே அப்பா.
இதுதான் வாழ்க்கை, நில்லாமல் ஓடு என்று நம்பிக்கை கொடுக்கும் உன் குரல்.. எனக்கு பல மடங்கு உத்வேகம்.

பல சுமைகள் தாங்கி விண்ணில் பறந்தாயே..
எனக்கு நிழலும் தந்தாயே...
இப்பொழுது உன்னுடன் நானும் சேர்ந்தே பறக்கிறேன்..
உன் சுமைகளை பகிர்ந்துக் கொள்ள.
என் கை பிடித்துக்கொள், வா என்னுடன்
உனக்கும் நான் சிறந்த தந்தை ஆகிற வரம் கொடு ... அப்பா !
« Last Edit: September 16, 2023, 08:59:45 am by Maari »

Cup_ICE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Reactions: +0/-0
  • ꧁༒Sandiyar_MLA༒꧂
    • View Profile
தந்தை

அன்னை பற்றி பேச ஆயிரம் பேர் இருக்க ஏனோ தந்தையை பேச எவரும் ஆவல் கொள்ளவதில்லை....

எவ்வாறு கொள்வான் தகப்பனின் வலி அவன் தகப்பன் ஆன பிறகே விளங்கும்...
   
தகப்பன் ஆன பின்னும் அவன் தகப்பன் கொண்ட வலி ஒவ்வொன்றும் அறிவதற்குள் அவன் ஆயுள் முடிந்து விடும்...

சீறி வரும் ஆற்றுண்ணீரை தடுக்கும் அணையை வியக்கும் மனமோ ஆதி முதல் வழி கொண்டு கடல் சேர்க்கும், கரையை கண்டுகொண்டதில்லை தான்...

இல்லத்திரசி அவள் ஈன்ற தன் பிள்ளைக்காக தன்னிலை மறந்து ஓடும் ஓர் இயந்திரம் ஆகிறார்...

தந்தை தான் இழந்தது ஒவ்வொன்றும் தன் பிள்ளை அடைய அட்ச்சிகரம் எட்டி பிடிக்க துணிபவன்  தகப்பன்...
   
வாடிய மகள் முகம் கண்டு அன்னை கண்ணீர் விட்டு கவலை கரைப்பாள்...

அக்கணம் ஆண் கொள்ளும் உள்குமுறல்  கோடி கோடியாய் சொல் கொண்ட தமிழாலும் விளக்கிட முடியா உணர்வது...
   
இராவணன் அரக்க குணம் பற்றி பேசும் நாம் யாரும் அவன் சிவன் மீது கொண்ட அளவிலா பக்தியை பொருள் படுத்தியது இல்லை...

அதுபோல் தான் மகன் நலம் காண வசைப்படும் தந்தை இன் பாசம் அரியப்படுவது இல்லை...
   
பிள்ளை எனும் பயிர் விளைய விதை நாத்தை புதைந்து மறைகிறது தந்தையின் இன் வாழ்கை♥

« Last Edit: September 16, 2023, 09:00:11 am by Maari »

Johnind97

  • Newbie
  • *
  • Posts: 23
  • Reactions: +1/-0
  • ♛WTC MAMAKUTTY♛
    • View Profile
அப்பா மகள்
என் மகளுக்கு அப்பா ஆக போகும் ஆதியின் முதல் கவிதை
என்னை பெற்ற தாயுக்கு என் நன்றி கூற
தேவன் அனுப்பிய என்னவளின் தேவதையே என் மகள்
அவள் எப்போதும் எனக்கு இளவரசி… அவள் சின்ன சின்ன
குறும்புகள் என் முகத்தை மலர வைக்கும் என் தாய் நீயும்
இது போல குறும்பு செய்தாய் என்று கூறுகையில்…..
உன்னை அம்மா 10 மாதம் சுமந்த வலியை யான் அறிவேன்,
நான் உன்னை கணவில் தொடங்கி கடைசி வரை சுமப்பதை யார் அறிவார்!!!!
உன்னை பற்றி என்னும் போதெல்லாம் கவிஞரின் வரிகள் மனதில்
ஆனந்த யாழை மீட்டுகிராய்…..நெஞ்சில் புன்னகை தீட்டுகிறாய்
என் அப்பாவின் வலியை உணர்ந்தேன் நீ  ஊசியின் வலியில் துடித்தபோது….
கடைசி வரை இருப்பாய் என்று நினைத்தேன் உன் கல்யாண வயது வரை
கைப்பிடிப்பவன் காப்பானோ கள்வனோ என்ற கவலை வேறு…. உன்னை என்றும் காப்பவன் நானே
நீ பாரதி கண்ட புதுமை பெண்ணாக இந்த வையத்துள் வளம் வர உன் அன்பு
அப்பாவின் வாழ்த்துகள்….. குட்டி பொண்ணு ♥️👑🦋
எனக்கு ஒரே ஒரு ஆசை தான் என் குட்டி பொண்ணோட குட்டி பொண்ணு கூட விளையாட ஆசை….ஓட முடியா வயதில் ஓடி விளையாட ஆசை

உனக்கென்ன வேணும் சொல்லு……🤩🤩🤩

இப்படிக்கு
1000 கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் ஆதி JS என்னும் JS Tamizhan
« Last Edit: September 16, 2023, 08:57:47 am by Maari »

Sanjikun

  • Newbie
  • *
  • Posts: 24
  • Reactions: +0/-0
  • ༒♛VASOOL_RAJA_MBBS ♛༒
    • View Profile
என் தந்தை

கை பிடித்து நடந்ததில்லை
ஆனால் நல்வழி தவற விட்டதில்லை

தோள்மேல் தூக்கி நடந்ததில்லை
ஆனால் உயர வைத்து உலகம் பார்க்க வைத்தவர்

ஆற்றில் நீச்சல் அடிக்க வைத்ததில்லை
ஆனால் வாழ்கையில் எதிர்நீச்சல் அடிக்க வைத்தவர்

படிக்காத மேதையின் படித்த முட்டாள் மகன் நான்
கடின உழைப்பால் உயர்ந்தவரின்
சோம்பேறி மகன் நான்

கேட்டு கிடைக்காத பல வரங்கள் இருப்பினும்
அதை ஈடுகட்ட கேட்காமல் கிடைத்த வரம் என் தந்தை

இன்னுமொரு வரம் வேண்டும்
அவர் விரல் பிடித்து நடக்க
« Last Edit: September 16, 2023, 08:57:23 am by Maari »

Vallavarayan

  • Guest
அப்பா என் முதல் நாயகன் நீ....
என்றுமே என்னுடைய நாயகன் நீயே ...

நான்  பிறந்து என் கை உன் கையில் எனை ஏந்திய‌கணம் முதல் இக்கணம் வரை என்னை சுமக்கின்றீர் ....

என் மழலை பருவம் உங்கள் நெஞ்சில் சுமந்தீர்
என்னுடைய பள்ளி பருவம் முழுதும் உங்கள் தோளில் சுமந்து ஒரு சாரார் நன்மை தீமை அனைத்தும் கற்று தந்தீர்...

நீங்களே என் நாயகன் வாழ்க்கையை கற்று தந்த ஆசான் நீர், நீங்கள் பிடிக்காவிட்டாலும் நான் எவ்விடத்திலும் தலை நிமிர வேண்டுமென , நீர் கல் மண் சுமந்து என் தேவையை பூர்த்தி செய்து ஒரு நல்ல வழிகாட்டியாக என் வாழ்க்கை மேலோங்க நீர் உங்கள் சுக துக்கத்தை மறந்து எனக்காக ஏன் வாழ்க்கையை அர்ப்பனித்த உள்ளம்....

அப்பா நீங்க பட்ட துன்பம் எதுவும்  மறைத்து என் சந்தோசத்தில் நீ பட்ட அனைத்து கதஉன்பமஉம் மறந்து நிம்மதி பெரு மூச்சு விட்டு நிம்மதி அடைந்தாய்...

என் ஒவ்வொரு வெற்றியிலும் நான் அடைந்த இன்பத்தை விட நீ அடைந்த இன்பம் மிக அதிகம்...

அப்போதெல்லாம் எனக்கு தெரியவில்லை, இவ்வளவு ஆனந்தம் இருக்குமென்று,
நானும் உனர்ந்தேன்  உன்னை...

நானும் ஒரு சித்தப்பா என்று ஆனபோது உணர்ந்தேன் என் நாயகனே, 
உன் அனைத்து இன்பத்தையும் நான் அண்ணனின் குட்டி தேவதையை கையில் ஏந்தயிலே உணர்ந்தேன்...
« Last Edit: September 16, 2023, 09:00:38 am by Maari »

Radha

  • Administrator
  • Newbie
  • *****
  • Posts: 42
  • Reactions: +4/-0
  • ꧁༒♛MAARI ♛༒꧂
    • View Profile
வணக்கம் மக்களே! ❤️இந்த கவிதைய நான் எனது தந்தைக்கும் தந்தை ஆகா காத்திருக்கும் என்னவனுக்கும்❤️ சமர்ப்பணம்...
💃பெண் பிள்ளை என்றும் தந்தையின் தேவைதை👸🏼 என்பார்கள் உண்மை என்று நான் உணர்தேன் எனது தந்தை என்னை சுமந்த விதத்தில்...
தந்தைக்கு என்றுமே பெண் பிள்ளை வரம் தான் பிசைவத்தில் அம்மக்கள் மட்டும் தான் வலி என்று சொல்வார்கள் சிலர் ஆனால் தந்தை என்பவன் இரு உயிரை சுமந்து பெற்று எடுக்கும் வலியே அனுபவிப்பான்.
ஒரு தந்தையாகவும் கணவனாகவும் உணர்வான்!
பெண் பிள்ளை ஈன்ற தந்தைக்கு தன் தெரியும்அவள் ஒரு தேவைதை👸🏼என்று அவளின் ஒரு எச்சில் முத்தத்திற்கு😘 தந்தை ஆனவன் அடிமை என்று முத்தம் குடுக்கும் அவளுக்கும் பார்க்கும் அன்னைக்கும் தெரியாது அந்த முத்தத்தின் வலிமை.
தன் மகள் சிரிப்பில் கவலை மறந்து அவள் அருகாமையில் உலகம் மறந்து அவள் ஒரு ஒரு தருணத்தையும் ரசித்து மகிபவன் தான் தந்தை.
ஒரு ஒரு மகளும் தனது தந்தையே தான் முன் உதாரணமாக எடுத்து கொள்வாள்...
தந்தை மகளிடம் தோற்பவன் என்று யார் சொன்னது மகளின் வெற்றியில் தான் அவனின் வெற்றியும் இருக்கிறது ஒரு ஒரு பருவத்திலும் மகஊடனே வளர்ப்பவன் தான் தந்தை என்னவன் தந்தை ஆகும் தருணத்திற்க்கு காத்து இருக்கிறேன் அவனின் மழலை பருவத்தை ரசிக நினைக்கும் கனவு காதலி
🌸🌷🌺
[/b]
எவனுக்கும் அஞ்சாத தமிழினியோட மருமகள்🔥🔥🔥

Fairy Princess

  • Newbie
  • *
  • Posts: 3
  • Reactions: +0/-0
  • 🧡Princess Of Mr Villan🧡
    • View Profile
அப்பா மகள் உறவுக்கு பிரிவே கிடையாது மகளின் முதல் முத்தம் அப்பாவின் முதல் அஸர் விருது அப்பாக்கள் அனைவரும் ஆண்டவன் அனுப்பிய தேவா தூதன் என்று தான் சொல்லவேண்டும் மகள் விழுந்து விடுவாள் என்று தெரிந்து அவள் விழும் முன் தங்கி கொள்ளும்பாச மிகு தந்தை என் கூடவே நடை பழகி நிலவை பாத்து சோறு ஊட்டுவாள் அன்னை அனால் நிலவை கேட்டாலே கொண்டு வந்து தருபவர் தான் அப்பாதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொல்வார்கள் அனால் மகளின் சொல்லுக்கு தந்தையானவன் ஏங்கி தவிக்கும் ஒரு ஒரு அப்பாக்களின் வரம் என்று என்னும் தந்தை கடவுளின் மாரு பிறப்பே என்று சொல்ல வேண்டும் அப்பாக்கள் மட்டும் தான் தந்தையாகவும் தமையனாகவும் நண்பன் ஆகவும் நல்ல உறவாகவும் இருக்க முடியும் தந்தை ஒரு வார்த்தையில் மாத்திரம் உண்டு என்றும் நீங்க தருணத்தை உருவாக்க முடியும்
« Last Edit: September 16, 2023, 09:55:07 am by Maari »

Rapunzel

  • Newbie
  • *
  • Posts: 10
  • Reactions: +0/-0
    • View Profile
என்னை பத்து மதங்கள்
கருவறையில் சுமந்து
என் தாய் என்றால்
என்னையும் என் தாயையும்
நெஞ்சில் சுமப்பது என் அப்பா

தந்தையின் தாய்மையை
மகள்களால் மட்டுமே உணர முடியும்
தெய்வங்கள் எல்லாம்
தோற்றுப் போகும்
தந்தையின் அன்பின் முன்னாலே

மகளின் கள்ளமில்லா
சிரிப்புக்குள்ளும் கொஞ்சலுக்குள்ளும்
அடங்கிப் போகும்
தந்தையின் கோபமும் கர்வமும்

மகள்களை பெற்ற
தந்தைகளுக்கு தான் தெரியும்
கடைசி காலத்தில்
தன் மகள் தான்
தனக்கு தாய் என்பது
« Last Edit: September 17, 2023, 08:08:52 am by Maari »

maari

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 81
  • Reactions: +3/-0
  • ꧁༒༒꧂
    • View Profile
MALIKKA32 KAVITHAI

மகளே !
உன் ஜனனம் எனக்கு மகிழ்ச்சி.
 உன் அழுகை சத்தம் கேட்டேன்.
என் ஆணவ சத்தம் போனது.
என் அதிகாரம் சிதைந்தது.
உன் ஆசை குரலை கேட்டேன்.
உன் புன்னகை கண்டேன்.
 என் அகங்காரம் அழிந்தது
மிருகமாய் இருந்த நான் மனிதன் ஆனேன்.
பள்ளி பருவம். உன் பள்ளி படிப்பு.
உன் மழலை கொஞ்சல்.
உன் அறிவு ஏற்றம்
என் உள்ளத்தில் உவகை.
என் மனதின் மலரே !
வாழ்வின் உணர்வே!
மழலையின் செம்மொழயே!
மானிடத்தின் மறுமலர்ச்சியே!
என் மகளே !
 என் தாயே!
 என் மலரே!
 இல்லத்தின் தேவதையே !
 பெண்மையின் செம்மலரே !
இல்லத்தின் இசை மகளே !
அன்று மகள்
வாழ அப்பா உழைத்தார்.
இன்று அப்பா வாழ
மகள் உழைக்கிறார்.
அப்பாவின் இறுதி பயணம் ....
வரை உறவு மகள்...!
கடவுளே.
 எத்துணை ஜென்மங்கள் எடுத்தாலும்
மகள் வயிற்றில் .....
நான் மீண்டும் மறுபிறவி
எடுக்க வேண்டும்.....!