Author Topic: ✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐Season 17💫  (Read 311 times)

maari

 • Administrator
 • Jr. Member
 • *****
 • Posts: 74
 • Reactions: +3/-0
 • ꧁༒༒꧂
  • View Profile
✨💐நிழல்🌹உயிர்🌹ஆகிறது💐
✨💐NIZHAL🌹UIRE🌹AGIRATHU💐
💥SEASON 17💫
✨சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது✨
கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு
கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 8 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3.இங்கே கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
4. கொடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி பதிவிட வேண்டும். இல்லையெனில் கவிதை ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 11.59 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்....
இப்படிக்கு உங்களை தாழ்மையுடன் வேண்டி கொள்வது
உங்கள் TCC Team..!
« Last Edit: May 21, 2024, 11:37:38 am by Maari »

Ramya

 • Newbie
 • *
 • Posts: 19
 • Reactions: +5/-0
  • View Profile
செங்கடல் அன்னையே என்னையும் உண்ணுள் ஏற்றுக்கொள்

இந்த உலகின் ஆன்மா நீ
அதனால் தான் உன்னை கடல் அன்னை என்கீறார்களா

ஆம் அந்த அன்னையின் அமைதி உண்டு
ஆனால் அதனுள் இருக்கு ஆழம் யாரும் அறியாத ஒன்று

எத்தனை உயிர்களுக்கு அரனாய் இருக்கிறாய்
கோடி கணக்கான மக்களின் பசி போக்குக்கிராய்

எனக்காக நீ கொடுத்த பரிசு ஏறாளம்
முத்தாய் சிப்பியாக உன் மனம் போல் வெண்ணிற சங்காக எவ்வளவோ கொடுத்தாய் ஆனால்

அமைதியாக இருந்தாலும் பொங்கி எழுந்தால் அனைத்தும் உனக்கே சொந்தம்

ஆயுள் முழுதும் அமைதியாக பார்த்த உன்னை சுனாமியாக கண்ட போது பயந்தேன் பின்புதான் யோசித்தேன் உன்னிடம் இருந்து வந்த அனைத்தும் மீண்டும் உனக்குள் ஏற்றுக்கொண்டாய்

என்னையும் ஏற்றுக்கொள் என் அன்னையே, மனித உயிராக இல்லை ஒரு சிறு மீனாய்

உன்னுள் நீந்தி என் வாழ்வை களிக்க ஆசை உனக்குள் மறையும் சூரியனை தடவி பார்க்க ஆசை
மனிதன் பார்க்காத உன் வயிற்றின் கர்பப்பையை கான ஆசை
அதில் எந்த சலனமும் இல்லாமல் உறங்க ஆசை

இந்த பிறப்பில் இல்லை என்றாலும் அடுத்த பிறவியில் என் ஆசையை நீ நிறைவேற்றவேண்டும்

By.
ரம்யா 💖
« Last Edit: June 10, 2024, 04:30:41 pm by Ramya »

Johnind97

 • Newbie
 • *
 • Posts: 19
 • Reactions: +1/-0
 • ♛WTC MAMAKUTTY♛
  • View Profile
அலைகள் அலைகள் அது ஓய்வதில்லை... .

ஆழ்கடலில் ஏற்படும் அதிர்வுகளால் அலைகள் உருவாகிறது

அது போல உன்னை பார்த்த என் ஆழ் மனதில் ஏற்பட்ட

அதிர்வுகளால் என்னுள் காதல் ஏற்பட்டது

அலைகளை எக்கரையில் நின்று பார்த்தாலும் ஒரு போல இருக்கும்

அது போல என் காதலும் எந்நிலையிலும் ஒரு நிலையில் இருக்கும்

என் காதல் ஆழி பேர் அலையாக மாறுவதும் அமைதியான ஆழியாக

மாறுவதும் என் மனதின் அடித்தளம் ஆன உன்னாலே என் கண்ணே

அலைகள் ஓய்வதில்லை ...காதல் அழிவதில்லை....

ஆயிரம் நதிகள் கலந்தாலும் கடலின் நீரை குடிக்க முடியாது

அது போல ஆயிரம் பேர் எதிர்த்தாலும் நம் காதலை பிரிக்க முடியாது


Radha

 • Administrator
 • Newbie
 • *****
 • Posts: 33
 • Reactions: +4/-0
 • ꧁༒♛MAARI ♛༒꧂
  • View Profile
ரொம்ப நாள் அப்பறம் கவிதை எழுதுறேன்  நான் நல்ல இருக்கேன் நீங்க எல்லாரும் நல்ல இருப்பிங்க, இது கவிதை  அப்படினு திட்டாதீங்க பா எனக்கு தெரிஞ்சதை எழுதுறேன்

கடல் எண்ணில் அடங்க ரகசியங்கள் அடங்கி இருக்கும் இயற்கை அன்னை .
எண்ணற்ற உயிர்களை காக்கும் இயற்கையின் அதிசயம் என்று தான் சொல்லவேண்டும்.
எண்ணற்ற உயிர்களை காப்பது கடல் அன்னை என்று தான் சொல்லுவார்கள் .
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் தொழில் படைத்தல், காத்தல், அழித்தல்
என்றதால் தான் மூன்று கடவுள் என்று சொல்கிறார்கள் இந்த மூன்றும் ஒருவர் செய்வதால் தான் அவளுக்கு கடல் மாதா தேவதை ராச்சசி என்று சொல்கிறார்கள் போல .
கடல் அன்னை என்று சொல்வார்கள் தான் சில உயிர்களை தன்னுள் இழுக்கும் பொழுது கடல் ராச்சசி என்று சொல்லுவார்கள் .

கடலின் ஆழத்தை எப்படி அளவுகோள் சொல்ல முடியாதோ அதே போல் பெண்களின் மனதில் இருக்கும் ரகசியத்தை அறிய முடியாது என்பார்கள் அவ்வளவு அதிசயங்களை கொண்டது தான் கடலும் பெண்களும் .
உலகத்தில் பொர்ணமியை ரசிக்க பல ரசிகர்கள் உண்டு ஆனால் அந்த பொர்ணமியை மிஞ்சும் அழகு அதான் பிம்பம் கடல் மீது விழுந்து வெள்ளி போல் ஜொலிக்கும் அதனை ரசிக்க ரெண்டு கண்கள் போதாது .
அலை காதலி தனது காதலனை சந்திக்க அணுதினமும் வந்து கரையை பார்க்கிறாள் போல காதலன் வரத்தால் தான் அவள் மீண்டும் கடல் சேர்கிறாலோ அவள் காதலனை காண நொடி பொழுது காத்திராமல் மீண்டும் கரையை செய்கிறாளோ இல்லை அங்கே உள்ள காதல் ஜோடிகளை பார்க்க வருகிறாளோ .
கடல் எண்ணற்ற உயிர் காத்தலும் ஒரு பொழுதும் ஓய்ந்த் அமர்ந்ததில்லை. கடல் அன்னை ஒரு குழந்தையின் கால்களை தண்ணிரால் முதத்தம் இட்டு அவள் மோசம் பெறுகிறாள் என்று கூட சொல்லலாம் .
கடல் கரையில் உள்ள ஒரு ஒரு ஜீவனும் ஒரு ஒரு மனநிலையில் இருப்பார்கள் அதனால் தான் என்னவோ கடல் ஒரே மனநிலையில் இருக்கிறதோ என்னவோ எவளோ இழந்தாலும் அவளின் முன் அமைதியாக அமர்ந்து ரசித்தாள் ஒரு புதிய சிந்தனையையும் உற்சாகத்தை தருவாள் .
உலகில் உள்ள ஏழு அதிசயத்தை விட உயர்ந்தது என்று கூட சொல்லலாம்.
நானும் அவளை ரசிக்கும் கடல் கன்னி
[/b]
« Last Edit: July 01, 2024, 08:46:11 am by Radha »

Manithan

 • Guest
பூமிக்கு அழகூட்டும் பேரழகியே
உலகில் உயிர்களை உருவாக்கிய அன்னையே

நிலவின் ஈர்ப்பால்  உன்னில் தோன்றும் அழகான அலை
நீ கோபம் கொண்டு பொங்கினால் தடுப்பவர் எவரும் இல்லை

மெல்லிசை கொண்டு அலை எழுப்பும் அழகியே
உன் ஆழகை கண்டு ரசிக்க காதலர்களோ கரையிலே

கடல் அலையை கண்டு புலவர்கள் பாடலாய் பாடுவர்
கடற் கரையில் அமர்ந்து காதலர்களோ கடலை போடுவர்

உன் பெருமையும் அழகையும் எழுதாத கவிஞனும் இல்லை
 எந்த கடற்கரைக்கு போனாலும் காதலர்கள் தொல்லை

பல வேடிக்கையான நிகழ்கவுகளும் உன்னைச் சுற்றி
திரைக்காவியங்கள் ஏராளம் கடலே உன்னைப் பற்றி

கற்பனைக்கும் எட்டாத மர்மங்கள் கொண்டவளே!
உலகத்தின் உயிர்களுக்கெல்லாம் அன்னையாய்‌ நின்றவளே!!
நதிகளும் சங்கமிக்கும் சமுத்திரமே உன்னிடம்!!!
வணங்குகிறேன் கடல்தாயே உன்னை இவ்விடம்!!!!« Last Edit: July 05, 2024, 03:50:24 am by Manithan »

MurrattuKaalai

 • Newbie
 • *
 • Posts: 6
 • Reactions: +1/-0
  • View Profile


  மீண்டும் மீண்டும் மூழ்க தூண்டும்  'கடல்'
     -நெஞ்சிக்குள்ள'  என்னமோ வசியம்  செஞ்ஜோ.

    _நீல வண்ண ஓவியம் அழிவே இல்லா காவியம் -கடல்

   _அலைகளை கரைக்கு அனுப்பி சிறுவர் மணல்வீட்டை
             சிதைக்கும் இந்த பொல்லாக் -கடல்,
   
_ஆழத்தில் பயணிக்க முத்து தரும் அதன் நீல‌த்தில்
             சுவைக்கான‌ உப்பு தரும் -கடல்

_ஆழ்கடலில் அமைதி கொண்டிருக்கும் நீர்
           கரையோரம் மழலையாய் ஆடிக்
                    கொண்டிருக்கும் ஓய்வின்றி

_உன்னோடு கைகோர்த்து நடக்க ஆசைப்பட்டேன்
              ஆனால் நான் உன் அருகில் வரும் பொழுது!
                     ஏன் என்னை தொட்டு விட்டு செல்கிறாய்
                            என்னை பிடிக்காமல ? இல்லை  வெட்கதிலா ??

_கடற்கரை ஓரம் மனதினில் பாரம் நடந்துவந்தேன் நான் ஒருமாலை நேரம்
              ஆறுதல் சொல்ல யாருமே இல்லை.
                            சிறுசிறு அலைகள் கூட்டமாய் வந்து
                                     தன் உப்புச்சுவையால் என் உப்புக்கண்ணீரை
                                            துடைத்து அலையே ... 
Urs MurrattuKaalai ❤️ Rocket Raja